லக்னோ, ஜூன் 2 - பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவ ரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு ஆதரவாகவும், போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும், சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறி அயோத்தி சாமியார்கள் ஜூன் 5இல் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள் ளனர். இதுகுறித்து ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான கோபால் தாஸின் மகன் கமல் தாஸ் கூறுகை யில், “போக்சோ சட்டத்தின் காரணமாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலை வரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் போன்ற அப்பாவிகள் துன்புறுத்தப்படு கிறார்கள். குறிப்பாக பார்ப்பனர்கள், மகான்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படு கின்றன. இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதால் அவசரமாக திருத்தம் செய்யப்பட வேண்டும். அயோத்தியில் உள்ள ராம் கதா பூங்காவில் ஜூன் 5 அன்று பாஜக எம்பி பிரிஜ் பூஷண் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய வலி யுறுத்தப்படும்” என்றார். புதிய நாடாளு மன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை கைது செய்ததற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார் கமல் தாஸ்.