states

img

ராஜஸ்தான்: காலணியில் ப்ளூடூத் பொருத்தி தேர்வில் மோசடி

ராஜஸ்தானில் காலணியில் ப்ளூடூத் பொருத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ராஜஸ்தானில் கடந்த ஞாயிறு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.  இந்நிலையில் அங்கு அஜ்மீரில் உள்ள பள்ளி ஒன்றில் இருபத்தி எட்டு வயதான கணேஷ் ராம் தாகா என்பவர் தேர்வு எழுத வந்துள்ளார். அவரிடம் வழக்கத்திற்கு மாறாக காதில் சிறிய அளவிலான ப்ளூடூத் ஹெட்போன் இருந்ததை தேர்வு கண்காணிப்பாளர் கவனித்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது தன்னிடம் செல்போன் இருப்பதையும் காலனிக்குள் ப்ளூடூத் கருவி இருப்பதையும், தேர்வு எழுத வெளியில் இருப்பவர்கள் தனக்கு உதவுவதையும் ஒப்புக்கொண்டார் இதையடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள தான் இந்த குரூப் பயன்படுத்தப்பட உள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டார். மேலும் பிகானர் பகுதியைச் சேர்ந்த ஜாட் என்பவரிடமிருந்து காலணியை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

;