states

img

மும்பை: மருத்துவமனையில் தவறான ஊசி போட்டதால் 2 வயது குழந்தை பலி  

மும்பையில் 2 வயது குழந்தைக்கு தவறான ஊசி போட்டதால்  4 பேர் மீது போலீசார் ஜன.20 (வியாழக்கிழமை) அன்று வழக்குப்பதிவு செய்தனர். 

மும்பையில் ஜனவரி 12 ஆம் தேதி 2 வயது ஆண்குழந்தை தஹா கான், காய்ச்சல் காரணமாக கோவண்டியில் அமைந்துள்ள நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

இந்த நிலையில் அன்று பணியிலிருந்த மருத்துவர் அங்கிருந்த செவிலியரிடம், 16 வயது நபருக்கு அசித்ரமைசின் மருந்தினை ஊசி மூலம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.  மருத்துவர் சொன்னதை செவிலியர் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அந்த ஊசியை குழந்தைக்கு செலுத்துமாறு தூய்மைப் பணியாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் தூய்மைப் பணியாளர், அசித்ரமைசின் ஊசியை 16 வயது நோயாளிக்கு பதிலாக 2 வயது குழந்தைக்கு செலுத்தியுள்ளார். குழந்தைக்கு தவறான ஊசியை செலுத்தியதில் சில நிமிடங்களிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனை உரிமையாளர் நசீருதீன் சயீத், டாக்டர் அல்தாப் கான், செவிலியர் சலிமுன்னிசா கான், துப்புரவு பணியாளர் நர்கிஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தைக்கு தவறான ஊசியை செலுத்திய 17 வயதாகும் தூய்மை பணியாளர், சிறார் என்பதால் அவர்மீது சிறார் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

;