states

img

மணிப்பூரில் டிரோன் மூலம் தாக்குதல் 2 பேர் பலி : மீண்டும் பதற்றம்

பாஜக ஆளும் மணிப்பூர் மாநி லம் வன்முறையால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பற்றி எரிந்து வரும் நிலை யில், 3 நாட்களுக்கு முன்பு அம்மாநில முதல்வர் பைரன் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில்,”நான் செய்யும் செயல்கள் அனைத்தும் மணிப்பூ ருக்கு நன்மைதரக் கூடி யது ஆகும். அதனால் நான் முதல் வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்” எனக் கூறினார்.

பைரன் சிங்கின் இந்த ஆணவப் பேச்சைத் தொடர்ந்து ஞாயிறு முதல் மணிப்பூரில் அடுத்தகட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடங்கியுள்ளன. ஞாயி றன்று மாலை சுராசந்த்பூர் மாவட்டத்தின் பெனியல் கிராமத்தில் உள்ள மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மைக்கேல் லாம்ஜாதங்கின் வீடு கொளுத்தப்பட்ட நிலையில், திங்களன்று காங்போக்பியில் உள்ள நகுஜாங் கிராமத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் சம்ப வம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள் ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ள தாகவும் மணிப்பூர் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

யாரு டிரோன் கொடுத்தது?

நாடுகளுக்கு இடையே அரங்கேறும் போர்களின் பொழுது ஆளில்லா டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் படும். ஆனால் மணிப்பூர் வன்முறையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படுவ தாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப் பூரில் வன்முறையை ஏற்படுத்தும் கும்ப லுக்கு டிரோன் யார் வழங்கியது? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.