states

img

குழப்பும் பாஜக அரசுகள் மியான்மரில் இருந்து யாரும் மணிப்பூருக்குள் வரவில்லை

பாஜக ஆளும் மணிப்பூர் மாநி லத்தில் மீண்டும் வன்முறை பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 2 நாட்க ளுக்கு முன் மியான்ம ரில் இருந்து பயங்கர வாத தாக்குதலை அரங்கேற்ற குக்கி இனத்தைச் சேர்ந்த 900 பேர் மணிப்பூருக்குள் ஊடுருவி உள்ளதாக வும், அவர்கள் செப். 28 அன்று மெய்டே வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த செய்தி போலி யானது என மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ள மணிப்பூர் காவல்துறை யின் டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள் ளார். அதே போல ஒன்றிய அரசு நிய மித்துள்ள மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங்கும் இது போலி யான தகவல் என உறுதி செய்துள்ளார். மியான்மரில் வன்முறையாளர்கள் ஊடு ருவியுள்ளார்கள் என முதலில் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளே செய்தி வெளியிட்டு,  தற்போது அவர்களே இல்லை என பின்வாங்குவது மணிப்பூர் மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.