கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் உள்ள நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசாக டீ கப்பை கையில் வைத்துக் கொண்டு சிக ரெட்டுடன் அரட்டை அடிக்கும் போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியா னது. அடுத்த சில மணி நேரங்களில் தர்ஷன் சிறையில் இருந்து கொண்டு வீடியோ காலில் பேசி வரும் வீடியோ ஒன்றும், சமூக வலைதளங்களில் வைர லாகியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 7 சிறை அதிகாரிகளை பணி யிடை நீக்கம் செய்ய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா உத்தரவிட்டுள் ளார். தொடர்ந்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சக குற்றவாளிகளை கர்நாடகா வில் உள்ள பல்வேறு சிறைகளுக்கு மாற்ற சிறை மற்றும் சீர்திருத்தப் பணி கள் துறைக்கு முதல்வர் சித்தராமையா வும் உத்தரவிட்டுள்ளார்.