states

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மானிய விலையில் உணவு

புதுச்சேரி, பிப். 10- புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர், பேரவைத் தலைவர்,  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அந்தந்த தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சில நேரங்க ளில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது, மதிய உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சிலர் சிறிது தூரம் சென்று பெரிய ஓட்டல்களில் அதிகப் பணத்தை செல வழித்து சாப்பிடும் நிலைதான் இருந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படு கின்றனர். எனவே,  சட்டப்பேரவை வளாகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் உணவகம் அமைப்ப தற்கு பேரவைத் தலைவர் செல்வம்  அனுமதி அளித்துள்ளார். இதனை யடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டது. செஞ்சி சாலையிலுள்ள சட்டப்பேரவையின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் ரூ.10 லட்சத்து 63 ஆயிரத்தில் புதிதாக உணவகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள், சட்டப்பேரவை ஊழியர்கள் என அனைவருக்கும் மானிய விலையில் உணவு விற்பனை செய்வதற்கு ஒப்பந்தமும் விடப்படுள்ளது. விரை வில் இப்பகுதியில் உணவகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு வரவுள்ளது குறிப்பிடத் தக்கது.

;