states

img

புதுவையில் பாரதியார் படிப்பகம் இடிப்பு ! மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

புதுச்சேரி, செப். 14- 27 ஆண்டுகளாக இயங்கி வந்த  பாரதியார் படிப்பகத்தை இடித்து  தரைமட்டமாக்கிய புதுச்சேரி நகராட்சி ஆணையரின் அத்து மீறலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி நகர் பகுதியில் ஈஸ்வரன் கோயில் வீதியில் மகாகவி  பாரதியாரின் 75ஆவது நினைவு தினத்தில், புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அருகிலுள்ள சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி இடத்தை சுத்தம்  செய்து படிப்பகம் அமைத்தனர். இங்கு நாளிதழ்கள், சிற்றிதழ் கள், போட்டி தேர்வுக்கான புத்தகங் களை மாணவர்கள்  பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆட்டோ  தொழிலாளர்கள், வியாபாரிகள் தங்களின் சொந்த பணத்தில் அந்த  படிப்பகத்தை உருவாக்கினார்கள். பல ஊடகங்களும், பத்திரிகை களும், கல்வியாளர்களும் படிப்பகத் தின் செயல்பாட்டை பாராட்டினர்.

நகராட்சியின் அத்துமீறல்
இந்நிலையில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார் நீதிமன்ற ஆணை இருப்பதாகக் கூறி  புதனன்று (செப்.14) பாரதி படிப்ப கத்தை இடித்து தரைமட்ட மாக்கினார். இதுகுறித்து அங்கி ருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் ஆணையரி டம் கேட்டபோது, அனைவரையும் உதாசீனப்படுத்தி பேசினார். சிஐடியு தலைவர்கள் நீதிமன்ற ஆணையை எங்களிடம் காட்டுங் கள் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத் தும் வகையில் பேசினார்.  புதுச்சேரி நகராட்சிக்கு சொந்த மான முதலியார்பேட்டை வானொலி  திடல், கோவிந்தசாலை சதூர்த்தி  விநாயகர் கோவில் உள்ளிட்ட  இடங்களில் உள்ள நூற்றுக்கணக் கான ஏக்கர் இடங்களை அரசியல்  செல்வாக்குள்ள தனி நபர் ஆக்கிர மித்துள்ள இடங்களை ஆணைய ரும், புதுச்சேரி அரசும் மீட்க முன்வரவில்லை. ஆனால் பொதுநோக்கத்துடன் தினசரி 100க்கும் மேற்பட்டோர் பயன்படுத்திய படிப்பகத்தை அவசர அவசரமாக அங்கிருந்த நூல்களை கூட எடுக்கவிடாமல் இடித்துத் தள்ளிய நகராட்சி ஆணை யர் சிவக்குமார் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் பல லட்சம் ரூபாய்  தனிநபரிடம் இருந்து கைமாறி யுள்ளதாகவும், ஆணையர் தனிப் பட்ட முறையில் பயனடைந்துள்ளார் என்ற புகாரும் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

;