states

img

புதுவை சுகாதாரத்துறைக்கு ஆம்புலன்ஸ்கள் அர்ப்பணிப்பு

புதுச்சேரி, மே 26 - புதுவை சுகாதாரத்துறைக்கு 13 ஆம்புலன்ஸ்களை முதல்வர் ரங்கசாமி அர்ப்பணித்தார்.  புதுவை சுகாதாரத்துறைக்கு ரூ. 1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 4 பெரிய ஆம்புலன்ஸ், 9 சிறிய ஆம்புலன்ஸ்களும் வாங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உட்பட ரூ.8லட்சம் செலவில் நவீன மருத்துவ முதல் உதவி கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆம்புலன்களை சுகாதாரத்துறையிடம் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகள்  கலந்து கொண்டனர். புதுவை அரசு மருத்துவமனைக்கு 2, காரைக்காலுக்கு 1, ஏனாமுக்கு 1 என 4 பெரிய ஆம்புலன்ஸ்களும், அரசு மருத்துவ மனைக்கு 6, காரைக்காலுக்கு 2, ஏனாமுக்கு 1 என 9 சிறிய  ஆம்புலன்சுகளும் வழங்கப்பட்டுள்ளன.

;