states

அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பாஜக தலைவர்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் கடும் தாக்கு

புதுச்சேரி, நவ.8- புதுச்சேரியில் அரசு அதி காரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பங்கேற்ற விவ காரத்தில், ரகசிய காப்பு பிர மாணத்தை மீறியதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதவி விலகவேண்டும்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலி யுறுத்தியுள்ளார். புதுச்சேரியில்  செய்தி யாளர்ளை சந்தித்த நாராயண சாமி, “ஆளுநர்களுக்கு அரசு முடிவுகளில் தலையிட அதி காரம் இல்லை. ஆளுநர், துணை நிலை ஆளுநர் ஆகி யோருக்கு தனிப்பட்ட கருத்து கள் இருக்கலாம். அதை பொதுவெளியில் பேசுவது அழ கல்ல. ஆனால், தமிழக ஆளு நர் ரவியும், துணை நிலை ஆளுநர் தமிழிசையும் இதை தொடர்ந்து செய்கின்றனர். மக்களால் தேர்வான அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றுதான் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அதை தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள் கேட்க மறுக்கின்றனர்”என்றார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அவர் பொறுப்பு வகிக்கும் துறைகளுக்கு ஆய்வு கூட்டம் நடத்தலாம். ஒட்டு மொத்த துறை களுக்கு நடத்தலா மா? தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனும் பங்கேற்றுள்ளார். அவரை அனு மதிக்க யார் அதிகாரம் அளித்தது என கேள்வி எழுப்பிய அவர், இதற்கு முதலமைச்சர் ரங்க சாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, ஒன்றிய இணைய மைச்சர் முருகன் ஆகியோர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இவ்விவகாரத்தில் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய ஒன்றிய இணையமைச்சர் பதவி விலகவேண்டும். தலை மைச்செயலர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நாராயணசாமி வலி யுறுத்தினார்.

;