பீகார் : 10ஆம் வகுப்பு மாணவர் சுட்டுக்கொலை
பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட் டணி ஆளும் பீகார் மாநி லத்தின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ளது சசாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி. இந்த பள்ளி யில் வியாழனன்று நடைபெற்ற சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வின் போது காப்பி அடிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் மாணவர்கள் இரு குழுவாக மோதிக்கொண்டனர். இந்த மோதல் வெள்ளிக்கிழமை அன்றும் நீடித்தது. இதில் ஒரு குழுவின் மாணவர் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து வந்து சரமாரியாக சுட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயங்களு டன் மீட்கப்பட்டுள்ள இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அவர்களின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவரின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் நீதி கோரி ரோஹ்தாஸ் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் நடவடிக்கை எடுப்பதாக ரோஹ்தாஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.