states

img

ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக்கொலை பஞ்சாப்பில் பதற்றம்

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநி லத்தின் லூதியானாவுக்கு அருகே கன்னா தாலுகாவில் உள்ளது இகோலா ஹா கிராமம். இக்கிரா மத்தைச் சேர்ந்த தர் லோச்சன் சிங் ஆம் ஆத்மியின் கன்னா தாலுகா பிரிவு தலை வராக உள்ளார். மேலும் பஞ்சாப் மாநி லத்தின் விவசாய அமைப்புகளின் முக்கிய பிரதிநிதி யாகவும் உள்ளார்.

இந்நிலையில், திங்களன்று மாலை இகோலாஹா கிராமத்தில் தர்லோச்சன் சிங்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். தர்லோச் சன் சிங்கின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் சிசிடிவி ஆதாரத்தின் படி விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி யுள்ளன.

பாஜக ஆளும்  மாநிலங்களைப் போல பஞ்சாப்

முன்பு சிரோமணி அகாலி தள கட்சி யில் இருந்த தர்லோச்சன் சிங் கடந்த 2022இல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலு க்கு முன்னதாக ஆம் ஆத்மியில் சேர்ந் தார். மோடி அரசுக்கு எதிராக தில்லி எல்லையில் போராடியவர்களில் ஒருவ ரான தர்லோச்சன் சிங்கின் மரணம் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநி லங்களைப் போல பஞ்சாப் மாநிலத்தி லும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளதால் தர்லோச்சன் சிங் கொல்லப்பட்டதை கண்டித்து விவ சாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக வும் அறிவித்துள்ளனர்.