states

img

ரூ.250 கோடிக்கு எம்.எல்.ஏக்களை விலை பேசும் பாஜக - வெளியான பரபரப்பு வீடியோ

தெலுங்கானாவில், டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏக்களை ரூ.250 கோடிக்கு விலை பேசும் வீடியோவை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார்.

ஐதராபாத் அருகே இருக்கும் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரகசிய பேரம் நடப்பதாக போலீசாருக்கு கடந்த அக். 26-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதை அடுத்து சோதனை நடத்திய போலீசார், ஹரியானாவை சேர்ந்த மதகுரு ராமசந்திர பாரதி என்ற சதீஷ் சர்மா, திருப்பதியைச் சேர்ந்த சாமியார் டி சிம்ஹாயாஜி, ஐதராபாத் தொழிலதிபர் நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, கைதான இவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி அக்.27-ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது. இந்த சூழலில், ராமச்சந்திர பாரதிக்கும், டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ ரோஹித் ரெட்டிக்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலின் ஆடியோக்கள் கடந்த 28-ஆம் தேதி வெளியாகின. இதை அடுத்து, ஹைதராபாத் போலீசார் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், எம்.எல்.ஏக்கள் 4 பேரிடம் பாஜக சார்பாக பேரம் பேசும் வீடியோக்களை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். 

இந்த வீடியோவில், இந்த வீடியோவில், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ரூ.50 கோடி செலவிட பாஜக தயாராக உள்ளதாகவும், அதனை பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் உறுதி செய்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வார் என்றும் கூறப்படுகிறது. கேரளாவில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், அமித்ஷாவுக்கு நெருக்கமான நபரான துஷார் வெள்ளப்பள்ளி, டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏக்களிடம் தொலைப்பேசியில் பேசும் காட்சிகளும் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

;