புதுதில்லி, ஏப்.13- நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரைப் பண வீக்க விகிதம், கடந்த மார்ச் மாதத்தில், 6.95 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் இல் லாத மிகமோசமான பணவீக்க விகிதம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து 3-ஆவது மாதமாக பணவீக்கம் 6 சத விகிதத்தைத் தாண்டியுள்ளது. 2021-22 நிதியாண்டில், பணவீ கத்தை நடுத்தர கால அளவில் 4 சத விகிதமாகவும், பணவீக்க உச்ச வரம்பை 6 சதவிகிதத்திற்கு உள்ளும் பரா மரிக்க ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், 2022 ஜனவரியில் 6.01 சதவிகிதம், பிப்ரவரியில் 6.07 சதவிகிதம், தற் போது மார்ச்சில் 6.95 சதவிகிதம் என தொடர்ந்து 3-ஆவது மாதமாக, ஒன் றிய அரசு நிர்ணயித்த உச்சவரம்பை பணவீக்க விகிதம் தாண்டியுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு பணவீக்க அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டிருப்பதுடன், ரெப்போ வட்டி விகிதத்தை குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகளாவது உயர்த்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. பால், மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலைகள் எதிர் பார்த்ததை விட அதிகம் உயர்ந்ததே பணவீக்க அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.