வாஷிங்டன், ஜூன் 12 - அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவில் பணி புரிந்து வந்த மேஜர் ஹாரிசன் மான் என்ற யூத அமெரிக்க அதிகாரி இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ‘பல ஆயிரம் பாலஸ்தீனர்களை பட்டினி போடவும் படுகொலை செய்யவும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அதிகாரம் அளித்துள்ளது’ என குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை எதிர்த்து ஏற்கெனவே ஆறுக்கும் மேற்பட்ட அமெரிக்க அரசு அதிகாரிகள் பகிரங்கமாக ராஜினாமா செய்துள்ளனர். எனினும் அந்நாட்டின் ராணுவம் மற்றும் புலனாய்வு துறையில் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறையாகும். இதே போல இஸ்ரேல் போர்க்கால அமைச்சரவையில் இருந்து முன்னாள் இஸ்ரேல் ராணுவத் தளபதியும் அமைச்சருமான பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.