states

img

அன்புக்குரியவர்களின் அழைப்புக்காகக் காத்திருக்கும் கடலோடி மக்கள்

கொல்லம்/கொச்சி, நவ.23- ‘தொலைபேசியில் அவன் குரல்  கேட்டாலே போதும் என்று உற வினர்கள் கேட்டால், வெளியுற வுத்துறை அமைச்சர் உட்பட தலை யிடுகிறார்கள் என்பதுதான் பதிலாக கிடைக்கிறது. அதையெல்லாம் நம்பித்தான் ஆக வேண்டும், வீட்டில் இருக்கும் எங்களால் என்ன செய்ய முடியும்’- நைஜீரியப் படைகளால் சிறை வைக்கப்பட்ட விஜித் வி நாய ரின் தந்தை திரிவிக்ரமன்நாயரின் கவ லை தோய்ந்த வார்த்தைகள் இவை. “வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து யாரும் தகவல் கொடுக்க வில்லை.இந்தியர்களை விடுவிக்க மேற்கொண்டு நடவடிக்கை இல்லை’ -  கப்பலின் மோட்டார்மேன் எர்ணாகுளம் முளவுகாட்டைச் சேர்ந்த மில்டன் டிகோ த்தின் சகோதரர் ஆண்டனி ஜோபி யின் கவலை இது. நைஜீரியாவில் சிறையில் இருக்கும்  எம்டி ஹீரோயிக் ஈடுன் என்ற கச்சா எண்ணெய் கப்பலின் பணியாளர்களின் குடும்பத்தினர், நாட்கள் செல்ல செல்ல ஒரு பயங்கரமான சூழலை  அனுபவித்து வருகின்றனர். உறவினர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்திய வெளிவிவகார அமைச்சின் தலையீடு இல்லாததால் இந்தக் குடும்பங்களும் சோகத்தில் உள்ளன. கடல் எல்லை யை மீறியதாக குற்றம் சாட்டி, ஈக்குவ டோரியல் கினி கடற்படை ஆகஸ்ட் 9 அன்று கப்பலைக் கைப்பற்றியது.

நைஜீரியப் படைகள் மாலுமிகளை பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பிடித்து வைத்தன.3 மலையாளிகள் நைஜீரியாவிடம் கடந்த 11ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டனர்.மாலுமிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகத்திற்கு நோர்கா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயனும் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். எனி னும், இதுவரை எந்த ஒரு பயனுள்ள இராஜதந்திர தலையீடும் இல்லை. விஜித்தின் போன் கால்கள் நின்று ஆறு நாட்கள் ஆகிறது என்று திரிவிக்ரமன் நாயர் தெரிிவித்தார். முன்னதாக நைஜீரிய ராணுவம் அவர் தனது குடும்ப உறுப்பினர்களு டன் இரண்டு நிமிடம் ஆங்கிலத்தில் பேச அனுமதித்தது.படகில் இருந்த வர்களின் மடிக்கணினியையும் ராணு வத்தினர் பறிமுதல் செய்தனர். செவ்வா யன்று (நவ.22) காலை ஏ.ஏ.ரஹீம் எம்.பி.இதுகுறித்து ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளீதரனுடன் நீண்ட  நேரம் விவாதித்ததாகவும் தூதரகத்தின் தலையீடு தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாகவும் ஏ.ஏ.ரஹீம் தெரிவித்தார். கப்பலின் தலைமை அதிகாரி சானு ஜோஸின் மனைவி மாடில்டா கூறுகையில், நைஜீரியாவிடம் ஒப்படை க்கப்பட்ட பிறகு தனக்கு எந்த தகவலும் வரவில்லை.வெளிவிவகார அமைச்சிலிருந்து தமக்கு எந்தத் தக வலும் வரவில்லை என தெரிவித்துள் ளார்.