states

img

என்சிஇஆர்டி பாடத் திட்டத்திலிருந்து குஜராத் வன்முறை, வறுமை, ஏற்றத்தாழ்வு, ஜனநாயகம் குறித்த பாடங்கள் நீக்கம்

புதுதில்லி, ஜூன் 3 -  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலானது, சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையி லான பாடத் திட்டங்களில் மீண்டும் தனது இந்துத்துவா கைவரிசையைக் காட்டியுள்ளது.  ஜனநாயகம், முகலாயர் ஆட்சி, குஜராத் கலவரம், இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வு, வறுமை உள்ளிட்ட பகுதிகளை அது நீக்கி யுள்ளது. அகில இந்திய அளவில் மத்தியக் கல்வி வாரியமும், மாநிலங்கள் அளவில் மாநிலக் கல்வி வாரியங்க ளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கான (Central Board of Secondary Education - CBSE) பாடத்திட்டங்களை, 1961-ஆம் ஆண்டு முதல் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன் சிலான ‘என்சிஇஆர்டி’ (National Council of Educational Research and Training - NCERT) வகுத்தளித்து வருகிறது.

ஆனால், 2014-ஆம் ஆண்டு, ஒன்றிய ஆட்சியதிகாரத்திற்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புக்களைப் போலவே, என்சிஇஆர்டி உள்ளிட்ட பாடத்திட்ட வடிவமைப்புக் குழுக் களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அப்போது முதல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி என்சிஇஆர்டி-யின் மூலம், பாடத் திட்டங்களை தங்களின் இந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மாற்றியமைத்து வருகிறது. வர லாற்றையும் மோசடியாக திருத்தி வருகிறது. அந்த வகையில்தான், தற்போது 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்களில், தங்க ளின் வகுப்புவாத அரசியலுக்கு எதி ரான பாடத்திட்டங்களை நீக்கியுள்ளது. 6-ஆம் வகுப்பு பாடங்களிலிருந்து ஜனநாயகம், காலநிலை மாற்றம், கானுயிர் பாதுகாப்பு, உணவு உள்ளிட்டவை குறித்த பகுதிகள் நீக் கப்பட்டுள்ளன. 7-ஆம் வகுப்பு பாடங்க ளிலிருந்து இந்திய ஏற்றத்தாழ்வு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் ஏன் ஏற்றத்தாழ்வு தீவிரமாக காணப்படுகிறது?’ என்பது இந்தப் பகுதியில் விளக்கப்பட்டி ருந்தது. அது தற்போது நீக்கப்பட்டு உள்ளது. 11-ம் வகுப்பு பாடத் திட்டங்களிலி ருந்து ஏழ்மை, அமைதி உள்ளிட்ட பகுதிகளும், 12-ஆம் வகுப்பு பாடங்களிலிருந்து குஜராத் கலவரம், இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை, பனிப்போர், இனப்பெருக்கச் செயல் பாடு உள்ளிட்ட பகுதிகளும் நீக்கப் பட்டுள்ளன.

இதற்கு கல்வியாளர்கள் மத்தி யில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே பாடத்திட்டங்கள் நீக்கப்படுவதாக கல்வியாளர்கள், ஆராய்ச்சியா ளர்கள் என துறைசார் வல்லுநர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப் பட்டதால், பள்ளிப் பாடத்திட்டங் களை எளிமையாக்கும் நோக்கில் மாற்றங்கள் மேற்கொண்டு வருவ தாக, வழக்கம்போல என்சிஇஆர்டி சமாளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமும் இதே போல, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு  வரலாறு, குடிமையியல் மற்றும் இந்தி பாடத்திட்டங்களில் பல்வேறு பகுதிகளை என்சிஇஆர்டி நீக்கியது. குறிப்பாக, குடிமையியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘பனிப் போர் காலம்’ மற்றும் ‘உலக அரசிய லில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங்களையும், அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘சுதந்திர இந்தியாவில் அரசியல்’ புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்க ளையும் நீக்கியது. அதாவது - ‘மக்கள் இயக்கத்தின் எழுச்சி’ மற்றும் ‘தனிக்கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்’  ஆகியவை நீக்கப்பட்டன. இந்தியா வில் சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூ னிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியா வில் காங்கிரசின் ஆட்சி போன்றவை இந்த அத்தியாயங்களில் இடம்பெற்றி ருந்த நிலையில் அவை நீக்கப்பட்டன. இதேபோல் காந்தி படுகொலையில் நாதுராம் கோட்சேவின் பங்கு போன்ற சில குறிப்பிட்ட பகுதிகளும் நீக்கப் பட்டன.

வரலாறு பாடப்புத்தகத்திலிருந்து முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயமே, அதாவது- (முகலாய தர்பார், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு கள்) இந்திய வரலாறு - பகுதி II- (‘Kings and Chronicles’ and ‘The Mughal Courts’) நீக்கப்பட்டன. இது தவிர, இந்தி புத்தகத்தில் இருந்து சில பத்திகள் மற்றும் கவிதைகளும் மாற்றியமைக்கப்பட்டன. கடைசியாக 9, 10-ஆம் வகுப்பு  சிபிஎஸ்இ புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி தொடர்பான டார்வின் கோட்பாடு பாடம் நீக்கப் பட்டது. டார்வின் கோட்பாடுதான் பகுத்தறிவு மற்றும் அறிவியலின் அடிப்படை. மூட நம்பிக்கையை தகர்க்கக் கூடிய சிந்தனையைத் தரக் கூடியது. ஆனால் என்சிஇஆர்டியோ, அறிவியல் சிந்தனையை வளர்க்கக் கூடிய டார்வின் தியரியை யும் நீக்கியது. தற்போது அடுத்தகட்டத் திற்கு நகர்ந்துள்ளது.

;