வாஷிங்டன், ஜூலை 2- அமெரிக்காவில் ஒவ்வொரு வாரத்தி லும் இரண்டு செய்தித்தாள்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. 2005 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 891 செய்தித்தாள்கள் அமெரிக்காவில் வெளி யாகி வந்தன. தற்போது இந்த எண்ணிக் கை 6 ஆயிரத்து 891 ஆகக் குறைந்து விட்டது. செய்தித்தாள்களுக்குக் கிடை த்து வந்த வருமானமும் சரிந்துவிட்டது. 75 ஆயிரம் ஊடகவியலாளர்கள் பணி யாற்றி வந்த நிலைமை மாறி, தற்போது 31 ஆயிரம் பேர் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள். பல்வேறு சிறிய பத்திரிகை களும் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் மிகப்பெரிய 100 நாளி தழ்களில், குறைந்தது 40 செய்தித்தாள் கள் வாரத்தில் ஒருமுறையாவது மின்னி தழாக வெளியாகிறது.