ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஷாஹீத் ஸ்மார்க்கில் பழங்குடியினரை வேலையில் இருந்து ஒதுக்குவதை நிறுத்த வேண்டும்; அனைத்து பழங்குடி மக்களுக்கான காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் ; ஒப்பந்த வேலைகளிலும் பழங்குடிகளின் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பழங்குடியினர் ஆதிவாசி அதிகார் மஞ்ச் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்குபெற்றனர்.