புதுதில்லி, அக். 27 - இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம் முன்னெப்போ தும் இல்லாத அளவுக்கு ரூ. 10 லட்சத்து 25 ஆயிரம் கோடியை தாண்டியது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான வெறும் 9 மாதங்களில் மட்டும் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் கோடி யைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே 9 மாத வர்த்தகத்தோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் இருதரப்பு வர்த்த கம் 14.6 சதவிகிதம் அதிகரித்துள் ளது. இதுதொடர்பான புள்ளி விவரங்களை சீன சுங்கத்துறை வெளியிட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளிடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் சூழலிலும் இருதரப்பு வர்த்தக அதிகரிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி ரூ. 7 லட்சத்து 35 ஆயி ரத்து 212 கோடி என்ற அளவில், 31 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனாவுக்கான இந்தியாவின் ஏற்று மதி ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 554 கோடியாக- சுமார் 36.4 சத விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம், சீனா உடனான வர்த்த கத்தில் இந்தியாவின் பற்றாக் குறை ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்து 658 கோடிக்கு மேல்சென்றுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில், இந்தியாவுக்கான சீன ஏற்றுமதி ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 664 கோடிக்கும், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 748 கோடி க்கும் நடைபெற்றது. வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 5 லட்சத்து 68 ஆயிரத்து 916 கோடியாக இருந்தது.
சீன இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு இந்தியா முக்கி யத்துவம் கொடுத்தாலும், மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் உள்பட பலவற்றை சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இதன் காரணமாகவே, வர்த்தகப் பற்றா க்குறை அதிகரித்துக் காணப்படு கிறது. இந்திய மருந்துப் பொருட் கள் பல வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுவதால், அதா வது அவற்றுக்கான தேவை அதி கம் இருப்பதால், சீன இறக்குமதி ஒரு வகையில் நம் நாட்டுக்கு சாதகமானதே என அரசு உயரதி காரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகம் அதிகரித்திருப்பதைப் போலவே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான சீனாவின் வர்த்தகமும் அதிகரித்திருப்பதாக சீனாவின் சுங்கவரிக்கான பொது நிர்வாகத்துறை தெரிவித் துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, இந்தோ னேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டில் 717 பில்லியன் டால ராக உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 13.80 சத விகிதம் அதிகமாகும். இதே போல், ஐரோப்பிய நாடுகளுட னான சீனாவின் வர்த்தகமும் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டுகளில் 6.90 சதவிகிதம் உயர்ந்து, 645 பில்லியன் டாலராக உள்ளது.