states

img

கோர மண்டலத்தில்...

ஒடிசாவில் மறைந்த “மனித நேயம்”

குப்பையைப் போல மொத்தமாக  சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உடல்கள்

பாலசோர், ஜூன் 4- ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளியன்று மாலை 6.55 மணியள வில் ஷாலிமாரிலிருந்து (மேற்கு வங்கம்) சென்னை (தமிழ்நாடு) நோக்கி வந்த கோர மண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு (கர்நாடகா) - ஹவுரா (மேற்கு வங்கம்) நோக்கி  சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும்  லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு  ரயில் அடுத்தடுத்து மோதியதில் தடம் புரண் டன. இந்த விபத்தில் 275 பேர் பலியாகிய நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயம டைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று  வருவதால் பலி எண்ணிக்கை உயரும் அபா யம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், இறந்தவர்களின் உடல்  களை தனித் தனியாக கொண்டு செல்லாமல்,  குப்பைகளை வாகனத்தில் ஏற்றுவது போல மொத்தமாக சரக்கு வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். பொதுமக்கள், உறவினர்கள் முன்னிலையே இறந்தவர்களின் உடல் களை சரக்கு வாகனத்தில் தூக்கி எறிந் துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஏற்கெனவே பலியானவர்களின் உடல் களை அருகில் மருத்துவமனை மற்றும் பள்  ளிக்கூடங்களில் சாதாரண துணி வைத்து கூட  போர்த்தாமல் அப்படியே வைக்கப்பட்டு இருந்தன. இடிபாடுகளில் சிதைந்த உடல்கள் ரத்த கசிவோடு குப்பை போன்று கிடந்தன. 

 

;