states

ஜூன் 12 பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் மாபெரும் கூட்டம்!

பாட்னா, மே 29 - 2024 மக்களவைத் தேர்தலை யொட்டி ஒன்றிணைந்து சந்திப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் களின் மாபெரும் கூட்டம், பீகாரில் ஜூன் 12 அன்று நடைபெறும் என ஐக்கிய ஜனதாதளம் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலை வரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், கடந்த மே 22 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகி யோரை தில்லியில் சந்தித்துப் பேசினார்.  இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “எதிர்க்கட்சி களின் கூட்டம் விரைவில் நடைபெறும்; ஓரிரு நாட்களில் கூட்டத்திற்கான நாள் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். அவ்வாறு கூட்டப்படும் கூட்டத்தில் நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து  கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, பீகார்  தலைநகர் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முதல்வ ருமான நிதிஷ்குமார் தலைமையில், ஜூன் 12 அன்று எதிர்க்கட்சித் தலை வர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் மன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.  இந்த கூட்டம், ஒட்டுமொத்த நாட்டுக் கும் முக்கியச் செய்தியை அளிப்பதாக இருக்கும்; ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைவதை காண முடியும்; நாட்டுக்கான மாற்றம், பீகாரிலிருந்து தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இந்த  கூட்டத்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப் பட்டு உள்ளது. இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமன்றி, இதுவரை காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்  அகிலேஷ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்த லில் பாஜக 38 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. மீதமுள்ள 62 சதவிகித வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக் கொண்டன. எனவே, 2024-இல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில் பாஜக-வுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும் என்று  நிதிஷ்குமார், சரத் பவார் போன்ற தலை வர்கள் நம்புகின்றனர். மொத்த முள்ள 543 மக்களவைத் தொகுதி களில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளி லாவது, பாஜக-வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றியும் பேசி வருகின்றனர். இதற்கான முன்னோட்ட மாகவே, ஜூன் 12-இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் கூட் டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;