states

img

வசமாக சிக்கும் உத்தரகண்ட் பாஜக தலைவரின் மகன்

டேராடூன், செப்.27- உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வர் வினோத் ஆர்யா. அம்மாநில பாஜக -வின் பிரபலமான தலைவர்களில் ஒருவராவார். இவரது மகன் புல்கித் ஆர்யா. இவர் ரிஷிகேஷில் உள்ள வனந்தரா பகுதியில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு, வரவேற்பாளராக பணி யாற்றி வந்த பவுரி கர்வால் மாவட்டம்  ஸ்ரீ கோட் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. அங்கிதா பண்டாரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்று அது  நடக்காத நிலையிலேயே ரிசார்ட்  உரிமையாளரும், பாஜக தலைவர்  வினோத் ஆர்யாவின் மகனுமான புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோருடன் சேர்ந்து, அங்கிதாவை வன்கொடு மைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

அதற்கேற்ப, தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயல்வதாக, அங்கிதா தனது தோழிக்கு முகநூலில் அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் ஆடியோ முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது. “இங்கு உள்ளவர்கள் என்னை பாலியல் தொழிலாளியாக மாற்ற முயற்சிக்கின்றனர்; இங்கு வரும் விருந்தினர்களுக்கு ‘ஸ்பா’ எனும் போர்வையில் ‘சிறப்பு சேவை’  செய்தால் ரூ.10 ஆயிரம் கொடுக் கிறேன் என ரிசார்ட் தரப்பில் தன்னை  அணுகினார்கள்” என்று அங்கிதா அந்த குறுஞ்செய்தி மற்றும் ஆடியோ வில் கூறியுள்ளார். மேலும், தன்னை தவறான இடங்களில் ஒருவர் தொட்டதாகவும் அவர் குடிபோதையில் இருந்த தாகவும், தனக்கு இந்த ரிசார்ட்டில் தொடர்ந்து பணி செய்ய விருப்பமில்லை என்பதையும் தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இரவும் கூட  முகநூல் தோழிக்கு அங்கிதாவிட மிருந்து தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அந்த தோழி திரும்ப அழைத்தபோது அங்கிதாவின் எண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.  எனினும், அந்தத் தோழி, ரிசார்ட் உரிமையாளரான புல்கித்  ஆர்யாவுக்கு அழைப்பு விடுத்துள் ளார். அவர் தூங்க வந்துவிட்டதாக கூறி யுள்ளார். ரிசார்ட் மேலாளரை அழைத்தபோது அவர் ஜிம்மில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு மறுநாளிலிருந்துதான் அங்கிதா காணாமல் போனது தெரியவந்துள்ளது.

அங்கிதாவுக்கும் அவரது தோழி க்குமான முகநூல் உரையாடல்கள் தற்போது ஸ்கிரீன் சாட் வடிவில், சமூக வலைத்தளங்களில் வெளி யாகி, பாஜக தலைவர் வினோத் ஆர்யா  மகன் புல்கித் ஆர்யா நிகழ்த்திய கொடூரமான படுகொலையை வெளி யுலகத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொலையாளிகள் புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்துள்ளன. கடந்த 3 நாட்களாக, ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் மறியல் போராட்டமும் நடந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அங்கிதா வின் உடலும் ஒருவழியாக தகனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையேதான், அங்கி தாவைப் போலவே ரிசார்ட்டில் பணி யாற்றிய மற்றொரு பெண்ணும் கடந்த  8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருப்பதால், அவரும் புல்கித்  ஆர்யாவால் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அந்தப் பெண்ணும், தற்போது  படுகொலையாகி இருக்கும் அங்கிதா வின் ஊரைச் சேர்ந்தவர்தான். 8 மாதங்களுக்கு முன் திடீரென அந்த பெண்  காணாமல் போய் இருக்கிறார். அங்கிதாவை காணவில்லை என்று  இப்போது எப்படி புல்கித் ஆர்யா  காவல்துறையில் புகார் அளித்தாரோ, அதுபோலவே அப்போதும் புல்கித் ஆர்யா புகார் அளித்துள்ளார். எனவே, இது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே, 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண் குறித்தும் காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனால், “தனது மகன் குற்றமற்ற வர். அவருக்கு ஒன்றுமே தெரியாது, அவர் மிகவும் நல்லவர். எப்போதும் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பார்” என்று தற்போது கட்சியி லிருந்து நீக்கப்பட்டுள்ள பாஜக தலை வர் வினோத் ஆர்யா நற்சான்றிதழ் அளித்துள்ளார்.

;