states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

வெட்கக் கேடாக ஆகியுள்ளது
சூழலியலை பாதுகாத்து கொண்டே பொருளா தார வளர்ச்சியை சாத்தியமாக்குவது எப்படி  என்பதை இந்தியா உலகுக்கே எடுத்து காட்டியுள் ளது என பிரதமர் பேசியுள்ளார். உலக வங்கி இந்திய பொருளாதார மதிப்பீட்டை 8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைத்துவிட்டது. ‘‘சூழலியல் செயல் பாட்டு குறியீடு’’ இந்தியா சூழலியல் பாதுகாப்பில் மிக பின் தங்கியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. மோடி யின் வாய்ப்பந்தல் கேலிக்குரியது என்பது மாறி வெட்கக்கேடாக ஆகியுள்ளது.

பன்மைத்தன்மை இந்தியா

அனைத்துக் கல்வி நிலையங்களி லும் இந்தி  மூலம் பாடங்கள் என அமித்ஷா தலைமையி லான நாடாளு மன்ற நிலைக் குழு பரிந்துரை. ஆர்எஸ்எஸ் வஞ்சக திட்டமான ‘‘இந்தி/ இந்து/ இந்துஸ்தான்’’ என்பதை  திணிப்பது நமது வளமான மொழிகளின் பன்மைத்தன்மையை அழிப்பதாகும். இதனை ஏற்க முடியாது! அரசியல் சட்டத்  தில் 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ள 22 அதிகாரப்பூர்வ மொழிகளும் சமமாக ஊக்குவிக்கப்பட வேண்டும். பன்மைத்தன்மையை கொண்டாடுவதுதான் இந்தியா!