states

img

சமத்துவத்தை வலியுறுத்துவதே சோசலிசம்: உச்சநீதிமன்றம்

புதுதில்லி, அக். 21 - மதச்சார்பின்மை என்பது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அங்கம் என்றும், மனிதர்களுக்குள் சமத்துவம் மற்றும் எல்லார்க்கும் எல்லாச் செல்வ மும் சென்றடைய வேண்டும் என்பதே சோசலிசம் என்றும் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. “இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது அதில், இந்தியா ஒரு சோசலிச மற்றும் மதச்சார்பற்ற நாடு என்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்க வில்லை. ஆனால் இடையில் 42-ஆவது திருத்தத்தின் மூலம் இரண்டு வார்த்தை களும் 1976-ஆம் ஆண்டு சேர்க்கப் பட்டிருக்கின்றன. எனவே, இவற்றை நீக்க  வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் சங்- பரிவாரப் பேர்வழிகளான டாக்டர் சுப்பிர மணியசாமி, பல்ராம் சிங், வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா சரமாரி கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதார்கள் ‘இந்தியா  மதச்சார்பற்றதாக இருக்க விரும்ப வில்லையா?’ என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர் பல்ராம் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், “நாங்கள் அப்படி சொல்லவில்லை. ஆனால் அரசியலமைப்பு முகப்புரையில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்க்கிறோம்” என்று வாதாடினார்.

மதச்சார்பற்ற நிலை முக்கியமான அம்சமாகும்

மற்றொரு மனுதாரரான அஸ்வினி உபாத்யாயா, “இந்தியா பழங்காலத்தி லிருந்தே மதச்சார்பற்றதாகத்தான் இருக் கிறது. எனவே தான் சுதந்திரமடைந்த பின்னர் அரசியலமைப்பு உருவாக்கப் பட்டபோது அதில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை சேர்க்கப்படவில்லை. ஆனால், இடையில் திருத்தம் செய்து இதை செருகியிருக்கின்றனர்” என்றார். அதற்கு “மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இந்த  நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மதச்சார்பின்மையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசிய லமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பகுதி III-இன் கீழ் உள்ள உரிமைகளை ஒருவர் உற்றுநோக்கினால், அவற்றில் மதச்சார்பற்ற நிலை முக்கிய அம்சமாக இருப்பதை தெளிவாக காண முடியும்” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்

சம உரிமை, சம பங்கீடு தத்துவமே சோசலிசம்

பல்ராம் சிங் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ‘சோசலிசம்’ என்ற வார்த்தையை சேர்ப்பது தனிப் பட்ட சுதந்திரத்தை தடுக்கும் என டாக்டர் அம்பேத்கர் கூறியிருப்பதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “சோசலிசம் என்பது சமத்துவம்  மற்றும் நாட்டின் செல்வம் சமமாகப் பங்கி டப்பட வேண்டும் என்பதும் அர்த்தம்... மேற்கத்திய அர்த்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றார். “1949 நவம்பர் 26 அன்று அரசி யலமைப்பு முகப்புரையில் செய்யப்பட்டது ஒரு பிரகடனம் என்பதால், அதில், திருத்தத் தின் மூலம் மேலும் சொற்களைச் சேர்ப்பது தன்னிச்சையானது” என்று சுப்பிர மணியசாமி கூறினார். “தற்போதைய முகப்புரையின்படி, இந்திய மக்கள் நவம்பர் 26, 1949 அன்று இந்தியாவை சோசலிச மற்றும் மதச்சார்பற்ற குடியர சாக மாற்ற ஒப்புக்கொண்டார்கள் என்ப தாக சித்தரிக்கக் கூடியது. அது தவறு” என்று அவர் கூறினார்.

திருத்தங்கள் எல்லாம் மக்களுக்குத் தெரியும்

அதற்கு பதிலளித்த நீதிபதி சஞ்சீவ்  கண்ணா, “திருத்தத்தின் மூலம் சேர்க்கப் பட்ட வார்த்தைகள், தனித்தனியாக அடைப்புக்குறிக்குள் தான் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், எனவே, அடைப்புக்குறிக்குள் உள்ளவை 1976 திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒன்று தான் என்றும் கூறினார். அந்த திருத்தத்தின் மூலம் மதச்சார்பற்ற, சோசலிச என்ற வார்த்தைகள் மட்டுமன்றி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு போன்ற வார்த்தைகளும் கூடத்தான் சேர்க்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டினார் . ஆனால், அந்தத் திருத்தங்களை அங்கீகரித்தால், எதிர்காலத்தில், ஜனநாயகம் போன்ற வார்த்தைகளை நீக்கியும் கூட முகப்புரையில் திருத்தம் செய்யப்படலாம் என்று அஸ்வினி குமார் உபாத்யாய போலிக் கண்ணீர் வடித்தார். இதனிடையே, இந்த வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.