புதுதில்லி, டிச.5- இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வாய்ப்பு உள்ளதாகவும், இந்தமுறை 25 முதல் 35 அடிப் படைப் புள்ளிகள் வரை ரெப்போ விகிதம் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ரிசர்வ் வங்கியின் 3 நாள் நாணயக் கொள் கைக் குழு கூட்டம் (monetary policy committee meeting - MPC) திங்களன்று துவங்கியது. இந்தக் கூட்டம் புதன்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி யின் ரெப்போ விகிதம் 25 புள்ளிகள் முதல் 35 வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘எக்னாமிக் டைம்ஸ்’ ஏடு நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட 10 வங்கிகளில் 9 வங்கிகள், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட லாம் என்று கூறியுள்ளனர். இந்த 9 வங்கிகளி லும் 5 வங்கிகள், ரெப்போ விகிதம் 35 அடிப்ப டைப் புள்ளிகள் உயர வாய்ப்பு உள்ளதாக வும், 2 வங்கிகள் 25 முதல் 35 அடிப்படை புள்ளி கள் உயரும் என்றும், 2 வங்கிகள் 25 புள்ளி கள் ரெப்போ விகிதம் உயரும் என்றும் கணித்துள்ளனர். இதன்மூலம் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிக ரிக்கும் என்பதுடன், இஎம்ஐ தவணைக் கட்ட ணங்களும் உயரும் அபாயம் எழுந்துள் ளது.
ரிசர்வ் வங்கி நாட்டின் பிற வணிக வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படை யில் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக் கான அடிப்படை வட்டி விகிதமே ரெப்போ விகிதம் (Repo Rate) எனப்படுகிறது. 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக்குழு கூட்டத்தில் ரெப்போ விகிதம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு 2022-23 நிதி யாண்டில் - அதிலும் கடந்த மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும், ரிசர்வ் வங்கியானது 190 அடிப்படைப் புள்ளி கள் அளவிற்கு ரெப்போ விகிதத்தை உயர்த்தி யது. தற்போது ரெப்போ விகிதமானது 5.90 சத விகிதமாக உள்ளது. இந்நிலையில்தான், டிசம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் ரிசர்வ் வங்கி யின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில், ரெப்போ விகிதம் மேலும் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்று தக வல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) முந்தைய ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான முதல் காலாண்டில் 13.5 சதவிகித மாக இருந்தது, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 6.3 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. இவ்வாறு ஜிடிபி வளர்ச்சி குறைந்து, பணவீக்கமும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பைத் தாண்டி 6 சதவீதத்திற்கு அதிகமாகவே நீடிக்கிறது. இந்தப் பின்னணியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தலாம் என்று ‘பாங்க் ஆப் பரோடா’ வங்கியின் தலைமைப் பொருளா தார நிபுணர் மதன் சப்னாவிஸூம் ரெப்போ விகித உயர்வை உறுதி என்று கூறியிருக்கி றார். அவ்வாறு ரிசர்வ் வங்கியானது, 35 அடிப்ப டைப் புள்ளிகளை உயர்த்தும் பட்சத்தில், ரெப்போ விகிதமானது 6.25 புள்ளிகளாக அதி கரிக்கும். இது வங்கிகளில் சாமானியர்கள் பெற்றுள்ள தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான மாதாந்திர தவணைத் தொகையில்தான் (EMI) எதி ரொலிக்கும் என்பதால், ரெப்போ வட்டி விகி தம் நேரடியாக பொதுமக்கள் மீதே சுமையாக மாறும் அபாயம் எழுந்துள்ளது.