states

img

பிரதமர், அமைச்சர்கள் நேரில் ஆய்வு

புவனேஸ்வர்,ஜூன் 4- ஒடிசா ரயில் விபத்துக்கு காரண மானவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவர் என்று பிரதமர் மோடி கூறினார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளியன்று இரவு 3 ரயில்கள் மோதி கோர விபத்து நிகழ்ந்தது. 275-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகியுள்ள இந்த  விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  ரயில் விபத்துப் பகுதியில் நடை பெறும் மீட்பு மற்றும்  சீரமைப்புப் பணி களை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஜூன் 4(ஞாயிறு) காலை நேரில் ஆய்வு செய்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்,  “மிக மோசமான இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை முடிவடைந்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்வார். விபத்திற்கான காரணம் என்ன? அதில் யாருக்கு பங்கு? என்பதைக் கண்ட றிந்துவிட்டோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பிரச்சனையால் இந்த விபத்து நடந்துள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முழுமை யான தகவல்கள் வெளியாகும். தொடர்ந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. புதன்கிழமை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும்” என்று தெரிவித்தார்.  

பிரதமர் ஆய்வு

ரயில் விபத்து நடந்த இடத்தை, பிரதமர் மோடி சனிக்கிழமையன்று மாலை பார்வையிட்டார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.  பாலசோர் மாவட்ட மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்த பயணி களை பிரதமர் மோடி சந்தித்து  நலம் விசாரித்தார். அங்கிருந்து அமைச்சர வை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருடன் பேசினார். காயமடைந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.  அதன்பிறகு பிரதமர் அளித்த பேட்டியில், ஒடிசா ரயில் விபத்து மிகவும் வேதனையான சம்பவம். இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒன்றிய அரசு துணை நிற்கும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும். இது மிக மோசமான விபத்து என்பதால், இது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று கூறினார்.

நிவாரணம் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த வர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை பிரதமர் மோடி அறிவித்தார். ஏற்கனவே ஒன்றிய  ரயில்வே அமைச்சர் உயிரி ழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

;