புதுதில்லி, மே 24- புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பது தொடர்பாக எதிர்க் கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த விழாவில் தயவுகூர்ந்து கலந்து வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் விழா வில் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. இதை அரசியலாக்ககுவது நல்லதல்ல. இது அரசியல் செய்யும் நேர மும் அல்ல. ஏறக்குறைய 100 வருடங்க ளுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றக் கட்டி டம் திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவை புறக்கணிப்பது என்பது பிரச்சனை இல்லாத ஒன்றை பிரச்சினையாக்குவதாகும். நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கி றேன். எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வர லாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்வில் தயவு கூர்ந்து கலந்து வேண்டும். நாடாளுமன்றம் என்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடியை சபாநாயகர் அழைத்துள்ளார். அதன்பேரில் பிரதமர் மோடி கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இது குடியரசுத் தலைவரையோ, குடியரசு துணைத் தலைவரையோ அவ மதிப்பதாக ஆகாது” எனத் தெரிவித்துள் ளார்.