states

img

ஐஏஎஸ் விதிகள் திருத்தத்திற்கு இதுவரை 9 மாநிலங்கள் எதிர்ப்பு!

புதுதில்லி, ஜன.27- மாநில அரசுப் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை சம்பந்தப் பட்ட மாநில அரசின் ஒப்புதலின்றி, தன்னிச்சையாக ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றிக் கொள்ளும் வகையில், ஐஏஎஸ் விதிமுறை கள் சட்டம் 1954-இல் திருத்தம் கொண்டுவர நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர் களுக்கும் ஒன்றிய அரசின் பணி யாளர், பயிற்சி அமைச்சகம் கடந்த ஜனவரி 12-இல் சுற்ற றிக்கை அனுப்பியது. இதற்கு அருணாசல பிர தேசம், மணிப்பூா், திரிபுரா, மத்தி யப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, இமாசல பிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள்  ஆதரவு அளித்துள்ளன.

கர் நாடகா, மேகாலயா, பீகார் மாநி லங்களுக்கு இதில் விருப்பம் இல்லை எனினும், அதனை ஓங்கி கூறுவதாக இல்லை. ஆனால், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, சத்தீஸ்கா், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஆரம்பத்திலேயே தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ‘ஐஏஎஸ் விதிமுறை களைத் திருத்தம் செய்வது கொடு மையானது. ஒருதலைபட்சத்தை ஊக்குவிக்கவே இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இந்தத் தீா்மா னத்தை பிரதமர் மோடி கைவிட வேண்டும்’ என்று கடைசியாக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நவீன் பட் நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தள ஆட்சி நடக்கும் ஒடிசா மாநில மும் ஐஏஎஸ் நியமன விதிகள் திருத்தத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “இந்தத் திருத்தம் மட்டும் அம லுக்கு வந்தால், அது மாநில அர சின் நிர்வாகத்தைப் பாதிப்பது மட்டுமன்றி, பல்வேறு வளா்ச்சித் திட்ட நடைமுறையிலும் தாக் கத்தை ஏற்படுத்தும்” என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

;