states

img

உலக அமைதி மாநாடு கேரள அரசின் கோரிக்கை பரிசீலனை நோபல் அமைதி மையம் தகவல்

ஒஸ்லோ, அக்.6- உலக அமைதி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்று  நோபல் அமைதி மையத்தின் செயல் இயக்குநர் கெர்ஸ்டி ஃப்ளோக்ஸ்டாட் தெரிவித்தார். நார்வே சென்றுள்ள முதல்வர் பினராயி விஜயனுடனான சந்திப்பில் அவர் இந்த உறுதி மொழியை வழங்கினார். நார்வேயின் நோபல் அமைதி மையம் நோபல் அமைதிப் பரிசை வழங்கும்அமைப்பாகும். கேரள அரசின் முந்தைய பட்ஜெட்டில் உலக அமைதி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த சந்திப்பின் போது, நோபல் அமைதி மையத்துடன் இணைந்து இதுபோன்ற ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய முதல்வர் விருப்பம் தெரிவித்தார். அத்தகைய மாநாட்டை ஒரு அரசாங்கம் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று ஃப்ளோக்ஸ்டாட் மேலும் கூறினார். அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளியன்று அறிவிக்கப்பட வேண்டிய , தனது நெருக்கடியான கால அட்ட வணையை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டத்திற்குத் தயாரா னார் நிர்வாக இயக்குநர். இந்த விவகாரத்தில் கேரளாவின் அதிகாரப்பூர்வ முன்மொழிவு கிடைத்தால், பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். இத்தகைய நிகழ்ச்சிகள் அமைதி மையத்தின் நேரடி தலைமையின் கீழ் தவிர மற்ற அமைப்புகளுடன் இணைந்து  இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒரு மாநில அரசு  இந்த திட்டத்தை முன்வைத்தால், அதற்கு ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.

;