states

img

குழப்பத்தில் நேபாள கிரிக்கெட் வீரரின் பாலியல் வன்கொடுமை விவகாரம்

நேபாள கிரிக்கெட் அணி யின் முன்னணி நட்சத் திர வீரரும், முன்னாள் கேப்டனு மான சந்தீப் லமிச்சானே (22) நேபாள தேசிய அணியில் மட்டு மல்லாமல் ஐபிஎல் (தில்லி), பிபி எல், பிஎஸ்எல், பிபிஎல், சிபிஎல் என பல உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாடியுள்ளார்.  மேலும் ஒருநாள் போட்டி யில் 50 விக்கெட்டுகளை அதி வேகமாக எடுத்த இரண்டாவது நபரும், டி-20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த மூன்றாவது வீரர் என்ற இரட்டை பெருமையை பெற்ற சந்தீப், கடந்தாண்டு 17 வயது மிக்க இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறினார். பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கூறிய பொழுது வெளிநாட்டில் இருந்த சந்தீப் 2022 அக்., 6-ஆம் தேதி காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய உடனே போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

ஜாமீன்

இந்த விவகாரம் தொடர்பாக கேப்டன் பொறுப்பை பறித்த நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப்பை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்ட நிலையில், 4 மாத விசாரணைக்கு பிறகு பதான் நீதிமன்றம் சந்தீப் லமிச்சா னேவிற்கு ஜாமீன் வழங்கியது. 

சஸ்பெண்ட் ரத்து

இந்நிலையில், திடீரென சந்தீப் லமிச்சானே மீதான  தடை உத்தரவை நேபாள கிரிக்கெட் வாரியம் நீக்குவ தாக அறிவித்துள்ளது. சந்தீப் லமிச்சானேவிற்கு வெறும்  ஜாமீன் மட்டுமே கிடைத்துள் ளது. அவர் பாலியல் வழக்கில் குற்றமற்றவராக நீதிமன்றம் அறிவிக்கவில்லை. ஆனால் நேபாள கிரிக்கெட் வாரியம் திடீரென சஸ்பெண்டு உத்த ரவை நீக்குவதாக அறிவிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

அரசு மேல்முறையீடு

சந்தீப் லமிச்சானேவிற்கு பதான் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை எதிர்த்து நேபாள அரசு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது. சந்தீப் லமிச்சானே பாலியல் வழக்கில் ஜாமீன், சஸ்பெண்ட் ரத்து, ஜாமீனை எதிர்த்து அரசு மேல்முறையீடு என மூன்று  குளறுபடியான சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பாதிக்கப் பட்ட இளம் பெண்ணுக்கு எதன் அடிப்படையில் நீதி கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.


 

;