பாஜக-வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்எல்ஏ லாலன் பஸ்வான்
பாட்னா, அக். 21 - “லட்சுமி தேவியை வழிபட்டால் மட்டுமே செல்வம் கிடைக்கும் என் றால், இஸ்லாமியர்களில் கோடீஸ் வரர்களும், மெகா கோடீஸ்வரர்களும் இருந்திருக்க மாட்டார்கள்” என்று பாஜக எம்எல்ஏ ஒருவரே பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் பாஜக-வின் லாலன் பஸ்வான். இவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் பேசி யிருக்கும் லாலன் பஸ்வான், “லட்சுமி தேவியை வழிபட்டால் மட்டுமே செல்வம் கிடைக்கும் என்றால், இஸ்லாமியர்களில் கோடீஸ்வரர் களும், மெகா கோடீஸ்வரர்களும் இருந்திருக்கமாட்டார்கள். முஸ் லிம்கள் லட்சுமி தேவியை வணங்கு வதில்லை, அவர்கள் பணக்காரர்கள் இல்லையா?. முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதில்லை,
முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லையா? அவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகவில்லையா?” என்று கேட்டுள்ளார். மேலும், “நீங்கள் நம்பினால் அது தேவி, இல்லை என்றால் அது வெறும் கல் சிலை. நாம் கடவுள் மற்றும் தெய் வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது நம்மை பொறுத்தது. ஒரு தர்க்கரீதியான முடிவை அடைய அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும். பஜ்ரங்பலி (அனுமன்) சக்தி கொண்ட தெய்வம் மற்றும் அது நமக்கு பலத்தைத் தரும் என்று நம்பப் படுகிறது. இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பலியை வணங்குவதில்லை, ஆனால், அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் இல்லையா?. நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் (மூட நம்பிக்கைகள்) முடிவுக்கு வரும்” என்று லாலன் பஸ்வான் கூறி யுள்ளார். லாலன் பஸ்வானின் இந்தப் பேச்சு பரவலாக வரவேற்பை பெற்றுள்ள நேரத்தில், பாஜக-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.