states

img

கோழிக்கோட்டில் மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி

கோழிக்கோட்டில் மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி

ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான வர லாற்றுப் புகழ்பெற்ற போராட்டங்களின் களமான கோழிக்கோடு மண்ணில் மாண வர் இயக்கத்தின் வலுவை வெளிப்படுத்தும் வகை யில் இந்திய மாணவர் சங்கத்தின் 18ஆவது அகில இந்திய மாநாடு எழுச்சிமிகு பேரணியுடன் ஜுன் 30 திங்களன்று நிறைவடைந்தது. மலபார் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்திலி ருந்து தொடங்கிய பேரணியில் கால் லட்சம் மாண வர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் உள்ள கே.வி.  சுதீஷ் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பினராயி விஜயன் பேசு கையில்,”இந்திய மாணவர் சங்கம் உருவானதி லிருந்து நாட்டின் மாணவர் பிரச்சனைகளில் விழிப்புடன் ஈடுபட்டு வருகிறது. இன்றும் நிறை வேற்ற வேண்டிய பெரிய பொறுப்புகள் எஸ்எப்ஐ-க்கு உள்ளது. ஒருபுறம், கல்வி முறையை காவி மயமாக்கவும் வரலாற்றை மாற்றி எழுதவும் முயற்சிக்கிறது. மறுபுறம் நாட்டின் இருப்புக்கே ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளை அது எடுத்து வருகிறது. சியோனிஸ்டுகளும் ஆர்எஸ்எஸ்ஸும் இரட்டைச் சகோதரர்கள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் பயங் கரவாத நடவடிக்கைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் துணை நிற்கிறது என்றும் கூறினார். இஸ்ரேலில் உள்ள சியோனிஸ்டுகளும் ஆர்எஸ்எஸ்ஸும் இரட்டைச் சகோதரர்கள். யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை உலகில் யாரும் அங்கீகரிக்காத போது, அதை ஒரு முன்மாதிரியாக அறிவித்தது ஆர்எஸ்எஸ் தான். ஆர்எஸ்எஸ் ஜனநாயக முறையில் செயல்பட வில்லை. ஆர்எஸ்எஸ் முசோலினியின் பாசிச நிறு வன வடிவத்தையும் ஹிட்லரின் நாஜி சித்தாந்தத் தையும் கொண்டுள்ளது. அவர்களின் குருஜி, தனது தத்துவ புத்தகமான “விசாரதாரா”வில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூ னிஸ்டுகளை உள் எதிரிகளாக பட்டியலிட்டுள்ளார். இது இந்தியாவின் பாரம்பரியத்திலிருந்து வந்த தல்ல. இந்த சிந்தனை இந்தியாவுடையது அல்ல, ஹிட்லருடையது” என அவர் கூறினார். கோழிக்கோடு கடற்கரைக்கு அருகிலுள்ள ஆஸ்பின் கோர்ட்யார்டில் (சீத்தாராம் யெச்சூரி, நேபாள் தேவ் பட்டாச்சார்யா மன்ச்) மாநாட்டை பத்திரிகையாளர் சசிகுமார், நாடக ஆர்வலர் எம்.கே. ரெய்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்கான போ ராட்டத்தில் தியாகம் செய்த 122 தியாகிகளின் நினை விடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட சுடர்கள் மாநாட்டில் ஏற்றப்பட்டன. கல்வித் துறையின் வணிகமயமாக்கலுக்கும், ஆளுநர்களைப் பயன்படுத்தி உயர்கல்வித் துறையை காவிமயமாக்கும் நடவடிக்கைகளுக் கும் எதிராக நாட்டில் மாணவர்களின் போராட்டங்க ளுக்கு வழிகாட்டுதலை மாநாடு வழங்கியது. ‘கல்வி ஒரு உரிமை, ஒற்றுமைதான் வழி, பன்மைத் துவம் என்பது பலம்’ என்ற முழக்கத்தை முன் வைத்த இந்த மாநாடு, நாட்டில் கல்வித் துறையைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது. கல்வியில் மதமயமாக்கல் மற்றும் பெருநிறு வனமயமாக்கலுக்கு எதிரான மிகவும் வலுவான போராட்டங்களையும் இந்த மாநாடு திட்டமிட்டுள்ளது.