states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்து கொண்டிருந்த நிலையில், இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.

ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சிபிஐ, அவரிடம் இருந்து ரூ. 5 கோடி பணம், இரண்டு ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சத்தீஸ்கரில் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் சுமார் 210 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.