10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு விற்ற தன் மூலம் 5.1 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டுள்ளதாக காங்கி ரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே தெரிவித் துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் அவர் மேலும் கூறுகையில், “உயர்பதவிகளில் நேரடி நியமனங்கள் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு உரிமையை மோடி அரசு ஒழிக்கிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு, ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை மாற்றும் பாஜகவின் சக்கர வியூகம் இதுதான். கடந்த 10 ஆண்டுகளில் 5.1 லட்சம் வேலை வாய்ப்புகள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கவிடாமல் செய்துவிட்டது மோடி அரசு. 10 ஆண்டு களில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றதன் மூலம் 5.1 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டுள்ளன. ஒன்றிய அரசுத்துறைகளில் 91% ஊழி யர்கள் தினக்கூலியாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவுமே நியமிக்கப்படு வது அதிகரித்து வருகிறது. 2022, 2023, 2024ஆகிய 3 ஆண்டுகளில் ஒன்றிய அரசு பணிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக் கான 1.3 லட்சம் வேலைகள் பறிக்கப் பட்டுள்ளன” என அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.