கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் நாட்டின் பொருளாதாரம் ஏறுவரிசைக்கு அர்த்தம் தெரியாமல் அதல பள்ளத்திற்கு சென்று வருகிறது. அனைத்து துறைகளும் அடி மேல் அடி வாங்கி வரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி முன்னெப் போதும் இல்லாத அளவில் 2023 மார்ச் மாதம் கடும் சரிவைக் கண்டுள்ளன. மார்ச் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 13.9 சதவீதமாகவும், இறக்குமதி 7.9 சதவீதகமாவும் குறைந்துள்ளது. மார்ச் 2022-இல் ஏற்றுமதி ரூ.3.6 லட்சம் கோடியாகவும் (44.57 பில்லியன் டாலர்), இறக்குமதி ரூ.5.1 லட்சம் கோடியாகவும் (63 பில்லியன் டாலர்) இருந்த நிலையில், நடப்பாண்டில் (மார்ச்) ஏற்றுமதி ரூ.3.1 லட்சம் கோடியாகவும் (38.38 பில்லியன் டாலர்), இறக்குமதி ரூ.4.7 லட்சம் கோடியாகவும் (58.11 பில்லியன் டாலர்) சரிந்து இந்திய வர்த்தக உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
1.5 லட்சம் கோடி வர்த்தகப் பற்றாக்குறை
2021-22ஆம் ஆண்டிற்கான மொத்த வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 6.7 லட்சம் கோடியாக (83.53 பில்லியன் டாலர்) இருந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த வர்த்தக பற்றாக்குறை ரூ.9.9 லட்சம் கோடியாக (122 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சி சம்பவம் என்ன வென்றால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் (மார்ச் ‘ 2023) வர்த்தக பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடி (19.73 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதுதான். மார்ச் 2023 இல் சரக்குகள் மற்றும் சேவைகள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.5.4 லட்சம் கோடி (66.14 பில்லியர் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 2022ஐ விட மார்ச் 2023இல் -7.53% அளவில் சரிவை கண்டுள்ளது. மார்ச் 2023 இல் சரக்குகள் மற்றும் சேவைகள் ஒட்டுமொத்த இறக்குமதிகள் ரூ.5.8 லட்சம் கோடி (72.18 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 2022 ஐ விட மார்ச் 2023 இல் -7.98% அளவிற்கு எதிர்மறையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
30 முக்கிய சரக்கு ஏற்றுமதித்துறை களில் 13 துறைகள் மார்ச் 2023 இல் நேர்மறையான வளர்ச்சியைக் கண்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், 17 துறைகள் அடி வாங்கியுள்ளன. ஆனால் ஒன்றிய அரசு 2021-22 உடன் ஒப்பிடும் போது 2022-23 இல் 30 முக்கிய துறைகளில் பதினேழு துறைகள் சாதக மான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள தாக பெயரளவில் கூறியுள்ளது. சரக்கு இறக்குமதியில் கடந்த மார்ச் மாதம் 30 முக்கிய துறைகளில் 14 துறைகள் எதிர்மறையான வளர்ச்சி, அதா வது மிக மோசமான அளவில் சரிவை கண்டுள்ள நிலையில், 16 துறைகள் லேசான அளவில் வளர்ச்சியை கண்டுள்ளன. சரக்கு இறக்குமதி சரிவில் கந்தகம் மற்றும் வறுக்கப்படாத இரும்பு பைரைட்டு கள், உரங்கள், வெள்ளி, எலக்ட்ரானிக் பொருட்கள் என பலவும் அடங்கியுள்ளன. இந்தியாவின் சரக்கு இறக்குமதியில் சீனாவின் பங்கும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2021-22இல் சீனாவின் பங்கு 15.43% ஆக இருந்த நிலையில், 2022-23இல் 13.79% ஆக குறைந்துள்ளது.
சீத்தாராம் யெச்சூரி ரீ - டுவிட் செய்துள்ள ‘தி வயர்’ ஏட்டின் செய்தியில் இருந்து