தென் கர்நாடக பகுதியில் பெருமளவு வசிக்கும் கொரக சமூக மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி ஜனவரி 23ஆம் தேதி மங்களூர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்புடன் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கர்நாடக மாநிலத்தின் தென்கனரா மாவட்டச் செயலாளர் முனீர் கடிபல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.