புதுதில்லி, டிச.26- இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் திட்டமிட்ட முயற்சிகளுக்கு எதி ராக மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் எம்பி ஆற்றிய உரையை மக்களும், தலைவர்களும் கையில் எடுத்துள்ளனர். ஜான் பிரிட்டாஸ் எம்பி பேசிய வீடியோவை கமல்ஹாசன் உள்ளிட்டோர் ட்வீட் செய்தனர். பிரதமர் முன்னிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை யிலான அலுவல் மொழி நாடாளுமன்ற விவகாரக் குழுவின் அறிக்கைக்கு எதிராக மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். “இந்தியைத் திணிக்கும் உங்களின் கேடுகெட்ட திட்டம் இந்த நாட்டையே அழித்துவிடும். ஐஐடிக்கள் இந்தியில் தேர்வுகளை நடத்தினால், சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைப் பொறுப்பில் இருப்பாரா?” என ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். இதை தனது ட்விட்டர் கணக்கில் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கில் தலைப்புகளு டன் ஜான் பிரிட்டாஸ் பகிர்ந்துள்ளார். கமல்ஹாசன் தமிழ் தலைப்புடன் அந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். தெலுங்கானாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் இந்த ட்வீட்டை கையில் எடுத்துள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை டேக் செய்து இந்த வைரலாக வீடியோ பரவி வருகிறது.