states

img

ரூ.100 கோடி கேட்டு மேனகா காந்திக்கு “இஸ்கான்” நிறுவனம் நோட்டீஸ்

முன்னாள் ஒன்றிய அமைச்ச ரும், விலங்குகள் உரிமை ஆர்வ லரும், பாஜக எம்பியுமான மேனகா காந்தி “ஹரே கிருஷ்ணா” இயக்கத்துடன் தொடர்புடைய “இஸ்கான் (ISKCON)” என்ற நிறுவனம் பசுக்கூடங்கள் பராமரிப்பு என்ற பெயரில் பசுக்களை இறைச்சிக்காக விற்ப தாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் குற்றச்சாட்டினார்.  மேனகா காந்தியின் குற்றச்சாட்டு களுக்கு மறுப்பு தெரிவித்த இஸ்கான் நிறு வனம், “இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் பசுக்கள் மற்றும்  காளைகளை பாதுகாப்பதில் இஸ்கான்  அமைப்பு முன்னணி அமைப்பாக உள் ளது.  வாழ்நாள் முழுவதும் சேவையாற்றிய பசுக்களும், காளைகளும், மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளதுபோல் அடிமாடுகளாக விற்கப்படுவதில்லை. மேனகா காந்தி மிகவும் பிரபலமான விலங்கு நல ஆர்வலர், இஸ்கான் அமைப்பின் நல விரும்பி.  ஆனால் அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது” என அறிக்கையுடன், மேனகா காந்தியிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இஸ்கான் நிறுவனம்.