திருச்சூர், பிப்.5- கேரளா இனி குட்டி கேரளமாக இல்லை என்றும், மற்ற மாநிலங்களுக்கும், நாடு களுக்கும் அனைத்து அம்சங்களிலும் முன்மாதி ரியாக கேரளா திகழ்கிறது. இன்று கல்வி, சுகா தாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் கேரளா முதலிடத்தில் உள்ளது என்று அம் மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் கூறினார். திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் கேரள வேளாண் உணவுப் பொருள் உற்பத்தி யை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசுகை யில், “இந்தியாவில் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியில் மொத்த வருவாயில் 20 சத வீதத்தை கேரளாவில் உள்ள 20 நிறுவனங்கள் கொண்டுள்ளன. இந்தியாவில் 1.25 கோடி பேர் கொரோனா பரிசோதனைக்கு பிந்தைய டிடைமர் சோதனைக்கு பயன்படுத்திய பொருட் கள் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்ட தாகும். ஆசியாவின் ரத்த வங்கிகள் பயன்படுத்தும் மிகப்பெரிய சேகரிப்பு பைகள் தயாரிக்கும் நிறு வனமும், மிகப்பெரிய செயற்கைப் பற்கள் தயாரிக்கும் நிறுவனமும் கேரளாவில் உள்ளன. உலகில் மசாலா பதப்படுத்துதலின் மையமாக கேரளா உள்ளது. உலகின் மிக முக்கியமான ஐந்து ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு களில் ஒன்றாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளது.
17.3 சதவீதம் தொழில்வளர்ச்சி
கேரளாவின் தொழில் துறை இந்த ஆண்டு 17.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியா வில் கடந்த ஆண்டு உற்பத்தி வளர்ச்சி 10.30 சத வீதமாக இருந்தது. இந்த ஆண்டுக்கான பொரு ளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 4.10 சதவீத மாக வெகுவாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், கேரளாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி முந்தைய ஏழு சதவீதத்தில் இருந்து, இந்த ஆண்டு 18.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சியில் கேரளா 28 ஆவது இடத் தில் இருந்து 15 ஆவது இடத்திற்கு முன்னேறி யுள்ளது. தொழில் நிறுவனங்களின் பணி மேலும் தொடரும். அரசின் துல்லியமான தலையீட்டின் ஒரு பகுதியாக, விவசாயத் துறையில் 6.70 சத வீதமும், தொழில் துறையில் 17.30 சதவீதமும், உற்பத்தித் துறையில் 18.70 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 1.29 லட்சம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள் ளன. கேரளாவில் ரூ.7825.21 கோடி முதலீடு மூலதனமாக வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2.78 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற் றில் 22,293 நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் பிரிவுகளாகும். இவர்களில் 41 சதவீதம் பெண் தொழில் முனைவோர் எனவும் அமைச்சர் தெரி வித்தார்.