states

img

கனடாவில் இருந்து இயங்கும் ரவுடிக் கும்பல் தலைவர்கள் மீது இந்தியா கவனம்

கனடாவில் இருந்து இயங்கும் ரவுடிக் கும்பல் தலைவர்கள் மீது இந்தியா கவனம் கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் எட்டு பெரிய ரவுடிக் கும்பல்களின் (கேங்) தலைவர் கள் மீது இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இவர்கள் சீக்கிய தீவிரவாதம், பிரிவினைவாத செயல்பாடுகள் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த பட்டியலில் முக்கிய நபராக சந்தீப் சிங் சித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் கனடா எல்லைப் பாதுகாப்பு நிறுவனத்தில் கண்காணிப்பாளர் பதவி க்கு உயர்த்தப்பட்டுள்ளார். காலிஸ்தான்  தீவிரவாதி லக்பீர் சிங் ரோடே மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட குர்ஜோத் கவுர் ஆகியோருடன் இவ ருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படு கிறது. குர்ஜோத் கவுர், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட காலிஸ்தான் விடுதலைப் படையின் (KLF) தலைவர் ஹர்மிந்தர் சிங்கின் விதவை மனைவி என கூறிக்கொள்கிறார். அர்ஷ்தீப் சிங் கில் என்கிற அர்ஷ் தல்லா என்பவரும் இந்த பட்டியலில் உள்ளார். இந்தியாவில் இளைஞர்களை குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டு வதில் வல்லவர் என அவர் குறிப்பி டப்படுகிறார்.  சரண்ஜித் சிங் என்கிற ரிங்கு ரந்தாவா, கொலை முயற்சி மற்றும் வழிப் பறி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்கு களில் சம்பந்தப்பட்டுள்ளார். ஜெய்பால் புல்லார் கும்பலின் சிறையில் உள்ள கேங்ஸ்டர் ககன் ஜட்ஜின் சகோதரர் ராமன்தீப் சிங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். லக்பீர் சிங் என்கிற லாண்டா, மொஹா லியில் உள்ள பஞ்சாப் காவல்துறை தலை மையகம் மற்றும் சிர்ஹாலி காவல் நிலையம் ஆகியவற்றின் மீது ஆர்பிஜி ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.  இவரை கைது செய்வதற்கான தகவல் தருபவர்களுக்கு ரூ.15 லட்சம் வெகுமதி  அறிவிக்கப்பட்டுள்ளது. சுக்துல் சிங் என்கிற சுகா துனேகே மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகி யுள்ளன. இவர் மீதும் தேடுதல் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.