புதுதில்லி, மார்ச் 22 - உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என தரவரிசைப்பட்ட 136 நாடுகளில், இந்தியா மிகமோசமான வகையில் 125ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகள் கூட இந்தி யாவைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி நிலவும் நாடுகள் என்ற இடத்தைப் பெற்றுள்ளன. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் (UN World Happiness Report) ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் செயல் படும் ‘ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வு கள் அமைப்பு’(UN Sustainable Development Solutions Network) என்ற அமைப்பு இந்த பட்டியலை கடந்த 10 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. வழக்கமாக, பல்வேறு நாட்டு மக்களின் வாழ்க்கை மதிப்பீடுகள், தனி மனித சுதந்திரம், சமூக ஆதரவு, ஆரோக்கியம், வருமானம், ஜிடிபி, ஊழல், தாராள மனப்பான்மை, மக்களின் நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சி கள் போன்றவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு, அதனடிப் படையில் முடிவுகள் வெளியிடப்படும். இந்தாண்டு இதுபோன்ற புள்ளி விவரங்கள் தவிர மேலும் சில அம்சங்களை யும் வைத்து தரவரிசைப் பட்டியல் உரு வாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான லாரா அக்னின் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், 2023-ஆம் ஆண்டில், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டி யலில் 137 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், வழக்கம்போல இந்தா ண்டும் நார்டிக் நாடுகளே முன்னணியில் வந்துள்ளன. பின்லாந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டென்மார்க் இரண்டாவது இடத்திலும் ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த நார்டிக் நாடுகள் கொரோனா பாதிப்பைச் சிறப்பாகக் கையாண்டதாக, அறிக்கையில் பாராட்டப்பட்டு உள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நார்டிக் நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் நான்காவது இடத்தையும், நெதர்லாந்து 5-ஆவது இடத்தையும், சுவீடன் 6-ஆவது இடத்தையும், நார்வே 7-ஆவது இடத்தையும், சுவிட்சர்லாந்து 8-ஆவது இடத்தையும், லக்சம்பர்க் 9-ஆவது இடத்தையும், நியூசிலாந்து 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. முதல்நிலை 20 நாடுகளில், முதன்முறையாக லிது வேனியா நுழைந்துள்ளது.
இவை ஒருபுறமிருக்க, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் வழக்கம் போல இந்தியா மோசமான இடத்தையே பெற்றுள்ளது. 136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 125-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. உல கில் மிகக் குறைவான மகிழ்ச்சி நிலவும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் அண்டை நாடுகளான நேபாளம் (78), சீனா (64) வங்கதேசம் (118), இலங்கை (112) ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா படு மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது. அதாவது 136-ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானைக் காட்டிலும் 11 இடங்கள் மட்டுமே இந்தியா முன்னிலை யில் உள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 146 நாடுகளில் 136-ஆவது இடத்தையும், 2021-ஆம் ஆண்டு 144 நாடுகளில் 139-ஆவது இடத்தையுமே இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.