states

img

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை முன்னேற்றம்

லடாக் எல்லைப் பகுதியில் நில வும் பதற்றத்தை குறைக்கும் வகையில் இந்தியா-சீனா இடையே நடை பெற்ற பேச்சு வார்த் தை முன்னேற்றம் கண்டுள்ளது. இரு  நாடுகளின் பேச்சு வார்த்தை குழுக்கள் கடைசிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளன.  டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிக ளில் ரோந்து பணி தொடர்பான விவ காரங்கள் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளன. முதற்கட்டமாக படைகளை விலக்கிக் கொள்வதே முக்கிய இலக் காக உள்ளது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முன்பாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் பங்கேற்க உள்ளனர்.  ரஷ்யாவின் கசான் நகரில் நடை பெறவுள்ள இந்த சந்திப்பை இரு தரப்பினரும் நேர்மறையாக பார்க்கின்ற னர். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதி யுடன் செயல்பட வேண்டும் என்ற முடி வுக்கு வந்துள்ளன.