states

ஒரு மாத வர்த்தகப் பற்றாக்குறை 1.92 லட்சம் கோடி

புதுதில்லி, ஜன. 18 - 2022-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 12.2 சதவிகிதம் சரிந்துள் ளது. இதன் காரணமாக, டிசம்பரில் மட்டும் 23.76 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 92 ஆயிரத்து 456 கோடி) அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. திங்களன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏற்றுமதி மற்றும்  இறக்குமதி தரவுகளின் அடிப்படை யில், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், முந்தைய 2022 நவம்பர் மாதத்தில் சுமார் ரூ. 2 லட்சத்து 59 ஆயி ரத்து 119 கோடி (3199 கோடி டாலர்)  மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி யாகி இருந்தது. இது 2022 டிசம்பரில் சுமார் ரூ. 2 லட்சத்து 79 ஆயிரத்து 288  கோடியாக (3,448 கோடி டாலர்) உயர்ந்துள்ளது. இறக்குமதியும் முந்தைய மாத அளவான சுமார் ரூ.  4 லட்சத்து 52 ஆயிரத்து 628 கோடியை  (5588 கோடி டாலர்) விடவும் அதி கரித்து, டிசம்பரில் சுமார் ரூ. 4 லட்சத்து  71 ஆயிரத்து 744 கோடியாக (5824 கோடி டாலர்) உயர்ந்துள்ளது. எனினும், 2021-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில்,

இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிந்துள்ளது. 2022 டிசம்பர் மாதத்தில் இந்தியா வின் சரக்குகள் ஏற்றுமதி, சுமார் 2 லட்சத்து 79 ஆயிரத்து 288 கோடி (3,448  கோடி டாலர்) ஆகும். இது கடந்த 2021-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நடந்த ஏற்றுமதியைக் காட்டிலும் 12.2  சதவிகிதம் குறைவாகும். 2021 டிசம்பரில் நம் நாட்டில் இருந்து சுமார்  3 லட்சத்து 18 ஆயிரத்து 087 கோடி  ரூபாய் (3,927 கோடி டாலர்) அளவிற்கு  ஏற்றுமதி நடந்திருந்தது குறிப்பிடத் தக்கது. அதுபோலவே 2022 டிசம்பரில் சுமார் ரூ. 4 லட்சத்து 71 ஆயிரத்து 744  கோடி (5824 கோடி டாலர்) அளவிற் கான பொருட்கள் இறக்குமதி செய்யப் பட்டு உள்ள நிலையில், இது கடந்த 2021  டிசம்பர் மாத இறக்குமதி மதிப்பான சுமார் ரூ. 4 லட்சத்து 88 ஆயிரத்து 673  கோடியை (6033 கோடி டாலர்) காட்டி லும் 3.5 சதவிகிதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம், 2022 டிசம்பரில் இந்தியா, சுமார் ரூ. 1 லட்சத்து 92 ஆயி ரத்து 456 கோடி (2,376 கோடி டாலர்)  வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்துள்ளது. ஏற்றுமதிக்கும் இறக்கு மதிக்கும் இடையிலான வித்தியாசமே வர்த்தகப் பற்றாக்குறை ஆகும். ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரிக்கும் பட்சத்தில் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  பெட்ரோலியப் பொருட்கள், பொறி யியல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி மற்றும் ஆடைகள், மருந்துகள் உட்பட 30 முக்கிய பிரிவுகளில் 19 பிரிவுகள் ஓராண்டிற்கு  முன்பு இருந்ததை விட ஏற்றுமதியில் சரிவைக் கண்டுள்ளன.