‘பிரைஸ்’ நிறுவன ஆய்வில் தகவல்
மும்பை, ஜன.25- 2015-16 முதல் 2020-2021 வரை யிலான கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் ஏழைக் குடும்பங்க ளின் வருவாய் 53 சதவிகிதம் அள விற்கு சரிந்து விட்டதும், இதே காலத்தில் பணக்காரர்களின் வரு வாய் 39 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, நகர்ப்புற ஏழை களின் எண்ணிக்கை 10 சதவிகி தத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான இந்தி யாவின் நுகர்வோர் பொருளாதாரம் (People’s Research on India’s Consumer Economy -PRICE) என்ற அமைப்பானது, 2021 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சர்வே ஒன்றை நடத்தியுள்ளது.
120 நகரங்கள் மற்றும் 800 கிரா மங்களுக்குச் சென்ற ஆய்வுக்குழு வினர், முதல் சுற்றில் 2 லட்சம் இந்தி யக் குடும்பங்கள், இரண்டாவது சுற்றில் 42 ஆயிரம் குடும்பங்கள் என சுமார் 2.5 லட்சம் குடும்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவற்றில் பெறப்பட்ட தரவு களை, ஏழை வர்க்கத்தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினர், நடுத்தர வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பணக்கார வர்க்கத்தினர் என மொத்தம் 5 ஆக வகைப்படுத்தி வெளியிட்டுள்ளனர். இதன்படி 2016-க்கும் 2021-க்கும் இடையிலான 5 ஆண்டுகளில் இந்தி யாவின் மிக ஏழ்மையான (Poorest) 20 சதவிகித குடும்பங்களின் வரு மானம் 53 சதவிகிதமும், கீழ் நடுத்தர வர்க்க (Lower Middle Class) குடும்பங்களின் வருமானம் 39 சத விகிதமும்,
நடுத்தர வர்க்க (Middle Class) குடும்பங்களின் ஆண்டு வரு மானம் 9 சதவிகிதமும் சரிந்துள்ளது. அதேநேரம் உயர் நடுத்தர வர்க்க (Upper Middle Class) குடும்பங்க ளின் வருமானம் 7 சதவிகிதமும், பணக்கார வர்க்க (Richest) குடும் பங்களின் வருமானம் 39 சதவிகித மும் உயர்ந்துள்ளது. தாராளமயமாக்கலுக்கு முந் தைய ஐந்தாண்டு காலத்தை விட, 2016-க்கும் 2021-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 20 சதவிகித பணக்காரக் குடும்பங்கள் அதிக வருமானம் ஈட்டியுள்ளன. 1995 ஆண்டு வாக்கில் நாட்டின் மொத்த குடும்ப வருமானத்தில் 50.2 சதவிகிதத்தை 20 சதவிகித பணக்கா ரர்கள் கொண்டிருந்தனர். அது 2021-இல் 56.3 சதவிகிதமாக உயர்ந் துள்ளது. இதற்கு நேர்மாறாக, நாட்டின் மொத்த குடும்ப வருமானத்தில், 20 சதவிகித ஏழை மக்களின் பங்கு முன்பு 5.9 சதவிகிதத்தில் இருந்தது, 2021-இல் 3.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, 2021-இல், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு காரணமாக இந்த 20 சத விகித ஏழை மக்கள் 2016-இல் ஈட்டிய வருமானத்தில் பாதியைத்தான் 2021-இல் வருமானமாக ஈட்டினர் என்று சர்வே முடிவுகள் தெரி விக்கின்றன. நகர்ப்புற ஏழைகளின் எண் ணிக்கையும் இந்தக் காலத்தில் அதி கரிப்பது ஆய்வில் தெரியவந்துள் ளது. 2016-ஆம் ஆண்டில் 20 சதவிகித ஏழைகளில் 90 சதவிகிதம் பேர் கிரா மப்புறங்களில் வசித்தனர். 2021-ல் இந்த எண்ணிக்கை 70 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேநேரம் நகர்ப்புறங்களில் வசித்துவந்த ஏழை மக்களின் எண்ணிக்கை 2016-இல் 10 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது,
2021-இல் 30 சதவிகித மாக உயர்ந்துள்ளது. தங்களின் இந்த சர்வே குறித்து, பிரைஸ் (PRICE) குழுவின் சிஇஓ ராஜேஷ் சுக்லா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், வீட்டுப் பணியா ளர்கள் போன்றோர் கொரோனா தொற்றுநோய் காரணமாக அதிக மாக பாதிக்கப்பட்டுள்ளனர் என் பதை தங்களின் சர்வே வெளிப் படுத்துகிறது. நகர்ப்புற ஏழை மக்களின் ஏழ்மை நிலை அதிகரிப்பு என்பது அந்த முழு பிரிவினரின் குடும்ப வருமானத்தையும் கடுமை யாக குறைத்துள்ளது. கிராமப் புறங்களில், கீழ் நடுத்தர மக்கள் (Lower middle class) இருப்பது இந்த சர்வே எடுக்கும்போது தெரிய வந்தது” என்று கூறியுள்ளார்.