காங்கிரஸ் 140 இடங்கள் வரை பெறலாம் என்று தகவல்
பெங்களூரு, ஏப்.29- கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக 7 நிறுவனங்கள் தங்களின் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டு உள்ளன. இவற்றில் இரண்டு கருத்துக் கணிப்புக்களில், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக் கும் என்றும், 5 கருத்துக் கணிப்புக்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என்றும் கூறியுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு கருத்துக் கணிப்பு கூட, பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறுவதாக இல்லை. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில், ‘ஈடினா’ (Eedina’s pre-poll survey), ‘டிவி 9 மற்றும் சி ஓட்டர்’ (TV9 and C-Voter), ‘பப்ளிக் டிவி’ (Public TV), ‘ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத்’ (The Asianet Survarna News Jan Ki Baat), ‘நியூஸ் பர்ஸ்ட் - மேட்ரைஸ்’ (NewsFirst -Matrize), ‘விஸ்டாரா நியூஸ்’ (Vistara News), ‘சவுத் பர்ஸ்ட் - பீப்பிள்ஸ் பல்ஸ்’ (South First-People’s Pulse) என பல் வேறு ஊடகங்கள், தாங்கள் மேற் கொண்ட கருத்துக் கணிப்பு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இதில், ஈடினா தனது கருத்துக் கணிப் பில், ‘‘காங்கிரஸ் கட்சி 132 முதல் 140 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும். பாஜக 57 முதல் 65 இடங்களையே கைப் பற்றும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 19 முதல் 25 இடங்களில் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல் லாது காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக வுக்கும் இடையிலான வாக்கு வித்தியா சம் 10 சதவிகிதம் அளவிற்கு இருக்கும் என்று ஈடினா கூறியுள்ளது. காங்கிரஸ் 43 சதவிகித வாக்குகளையும், பாஜக 33 சதவிகித வாக்குகளையும், மதச்சார் பற்ற ஜனதா தளம் 16 சதவிகித வாக்கு களையும் பெறும் என்று கணித்துள்ளது. கர்நாடகத்தின் 67 சதவிகித மக்கள் பாஜக ஆட்சி தொடரக்கூடாது என்ற மன நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட் டுள்ளது. ‘டிவி 9 மற்றும் சி ஓட்டர்’ கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 106 முதல் 116 இடங்களையும், பாஜக 79 முதல் 89 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 இடங்களையும் கைப் பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. ‘பப்ளிக் டிவி’ தனது ஆய்வில், காங்கிரஸ் 98 முதல் 108 இடங்களையும், பாஜக 85 முதல் 95 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28-33 இடங்களையும் கைப் பற்றும் எனத் தெரிவித்துள்ளது.
‘ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத்’ ஊடகம் நடத்திய ஆய்வில் பாஜக 98 முதல் 109 இடங்களையும், காங்கிரஸ் 89 முதல் 97 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல ‘நியூஸ் பர்ஸ்ட் - மேட்ரைஸ்’ நிறுவனமும் பாஜகவுக்கு 96 முதல் 106 இடங்களும், காங்கிரசுக்கு 84 முதல் 94 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 29 முதல் 34 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ‘விஸ்டாரா நியூஸ்’ நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 88 முதல் 93 இடங்க ளையும், காங்கிரஸ் 84 முதல் 90 இடங்க ளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 முதல் 26 இடங்களையும் வெல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சவுத் பர்ஸ்ட் - பீப்பிள்ஸ் பல்ஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 95 முதல் 105 இடங்களும், பாஜக 90 முதல் 100 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 முதல் 30 இடங்களும் பெறும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக 5 நிறுவனங் கள், கர்நாடகாவில் தொங்கு சட்ட மன்றம் அமைய வாய்ப்புள்ளதாக தெரி வித்திருப்பது, தேர்தலுக்குப் பின், மதச்சார்பற்ற ஜனதாதளம் ‘கிங் மேக் கர்’ என்ற இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதையும் வெளிப்படுத்தி யிருக்கிறது. கர்நாடகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக 2008-ஆம் ஆண்டு 110 இடங்களிலும், 2018-ஆம் ஆண்டு 104 இடங்களிலும் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளி டம் இருந்து எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி, குறுக்கு வழியில் ஆட்சியில் அமர்ந்தது. அது இந்த முறையும் அரங் கேறுமா? என்பது வாக்கு எண்ணிக் கைக்குப் பின்னர்தான் தெரியும். எப்படி பார்த்தாலும் 2023 கர்நாடகத் தேர்தல் பாஜக-வுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும், ஹிஜாப் விவகாரம், அரசு டெண்டர்களுக்கு 40 சதவிகித கமி ஷன், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கான இடஒதுக் கீடு விவகாரம் ஆகிய விவகாரங்கள், மாநிலத்தில் பாஜகவிற்கு எதிரான மன நிலையை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.