காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்பினால், பாஜகவினர் முந்திக்கொண்டு பதிலளிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தை பற்றி பேசினால் பாஜகவினர்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை?
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
தில்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் - ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோல்வியுறச் செய்யுங்கள்.
அரசியல் விமர்சகர் யோகேந்திரர்
தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது. ஆம் ஆத்மியின் தோல்வி என்பது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் பாஜகவை வீழ்த்துவதில் நேர்ந்த மிகப்பெரிய பின்னடைவு ஆகும். இது நல்லதல்ல.
திமுக எம்.பி., கனிமொழி சோமு
இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய மின்சாரப் போக்குவரத்து திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? மின்சார வாகனப் பயன்பாட்டுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் எந்தளவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன?