states

img

தில்லி அரசின் அதிகாரங்களை பறித்தது, மத்திய பாஜக அரசு.... இனிமேல் ஆளுநர் வைத்ததுதான் சட்டம்....

புதுதில்லி:
தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை முடக்கும் விதமாகவும், துணைநிலை ஆளுநருக்கு கூடுதல்அதிகாரங்களை வழங்கும் விதமாகவும் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்துநிறைவேற்றியுள்ளது.

‘தில்லி அரசு தேசியத் தலைநகர் பிராந்திய திருத்த மசோதா-2021’என்ற பெயரிலான இந்த புதிய மசோதாமூலம், எந்த ஒரு திட்டம், செயல் திட் டம், மக்கள் நலத்திட்டத்தை தில்லி மாநில அரசு முன்னெடுத்தாலும் துணை நிலை ஆளுநரின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது.மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ள இந்த மசோதா, விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட உள்ளது.இதனிடையே, “மத்திய அரசின் புதிய மசோதா, தில்லி மக்களை அவமதிக்கும் செயல் என்று முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால்” விமர்சித் துள்ளார். “மக்கள் யாருக்கு வாக்களித்தார் களோ அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கும் திட்டமிட்ட செயலே இந்த மசோதா. மக்களால்தோற்கடிக்கப்பட்ட பாஜக; கொல் லைப்புறம் வழியாக தில்லி மாநிலஅதிகாரங்களைப் பறிக்கப் பார்க்கிறது; இது தில்லி மக்களை ஏமாற்றும்செயல்” என்றும் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.2020-இல் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு 8 இடங்கள் மட்டுமேகிடைத்தன என்பது குறிப்பிடத்தக் கது.

;