headlines

img

தலையில் குட்டு வைத்த தலைநகர் தேர்தல் முடிவு

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலிலும்  பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

தலைநகர் தில்லியில் பாஜகவுக்கு கிடைத்த படுதோல்வி நாடு முழுவதும் உற்சாக அலை களை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டப் பேரலை நாடு முழுவதும் சுழன்று வீசி வரும் நிலையில் இந்த தேர்தல் முடிவு போராட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் அதற்கடுத்து வந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் மிகவும் இழி வான முறையில் பாஜக பிரச்சாரம் செய்தது. வெறுப்பு அரசியலை விதைத்தது. தன்னுடைய குறுகிய அரசியல் வெற்றிக்காக நாட்டு மக்க ளை துண்டு போட அந்தக் கட்சி துணிந்தது. இது வரை இந்திய வரலாறு கண்டிராத அளவுக்கு மிக வும் மோசமான தேர்தல் உத்திகளை பிரதமர் மோடி யும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பின்பற்றினர். இதற்கெல்லாம் தில்லி மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா என அடுத்தடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. மகாராஷ்டிராவில் கடுமையான தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்ட போதும் பாஜக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த பாஜகவுக்கு தில்லி முடிவு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது.  மோடியும் அமித்ஷாவும் வெல்லற்கரியவர் கள். பாஜகவின் வெற்றியை யாரும் தடுக்க முடி யாது என்றெல்லாம் அந்தக் கட்சியின் ஆதரவு ஊடகங்கள் மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சரியான மாற்று அமையுமானால் பாஜகவை படுகுழியில் தள்ள முடியும் என்பதை தில்லி தேர்தல் முடிவும் உணர்த்தியுள்ளது. 

தலைநகர் தில்லியின் வீதிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிராக நடைபெற்று வந்த போராட்டங்களை அடக்குமுறை மூலம் ஒடுக்க முயன்று தோற்ற பாஜக, அந்தப் போராட்டங்கள் குறித்து மதவெறி யை நோக்கி திசை திருப்பி அதன்மூலம் வெற்றி பெற்றுவிட முடியும் என பாஜக நம்பியது. தில்லி மட்டுமல்ல இந்தியாவும் மதவெறிக்கு எதிராகவே நிற்கிறது என்பதை இந்த முடிவு உணர்த்துகிறது. 

தில்லி தேர்தல் முடிவு காங்கிரசுக்கும் சில படிப் பினைகளை தந்துள்ளது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்க முடியாமல்  ஒன்றுபடுத்த காங்கிரஸ் முன்வர வேண்டும் என தில்லி மக்கள் உணர்த்தியுள்ளனர்.  தில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சிக்கு பாஜக தொடர்ந்து தொல்லை கொடு த்து வந்தது. அந்த ஆட்சியை நிலைகுலையச் செய்ய இழிவான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டது. மாநில உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது என்பதையும் தில்லி மக்கள் எச்சரிக்கையாக கூறியுள்ளனர். பாஜக எடுத்து வரும் மதவெறி மற்றும் நாசகர பொருளாதார நட வடிக்கைகளுக்கு எதிரான தீர்ப்பாகவே தில்லி தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

;