states

img

போர்களை முடிவுக்கு கொண்டு வருக! அமைதிப் பேச்சுக்கு பிரிக்ஸ் அழைப்பு

மாஸ்கோ, அக். 24 - ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 43 பக்க கசான் பிரகடனத்தை புதன் கிழமையன்று (அக்டோபர் 23) அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டன. சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான், வெனிசுலா ஜனா திபதி நிக்கோலஸ் மதுரோ உள் ளிட்ட 36 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பலதரப்பு வாதத்தை (வளரும் நாடுகளின் குரலை) வலுப்படுத்துவது, பயங்கர வாதத்தை எதிர்ப்பது, வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி யை ஊக்குவிப்பது, தெற்குலக நாடு கள் எதிர்கொண்டு வரும் பிரச்ச னைகளைத் தீர்ப்பது ஆகியவை குறித்த விவாதங்கள் நடைபெற்றன. “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பின் கீழ், கசான் பிரகடனம் பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமை மற் றும் முக்கியத்துவத்தை வலி யுறுத்தியுள்ளது. அமைதியைப் பேணுவதற்கும், ஒருதலைப்பட்ச மற்ற நியாயமான சர்வதேச ஒழுங்கை உறுதி செய்வதற்கும், நிலையான வளர்ச்சியை மேம் படுத்துவதற்கும் இந்தப் பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது.

பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்

1. ஒருதலைப்பட்சமின்றி கடன் கொடுப்பதிலும், உதவுவதிலும் வளரும் தெற்குலக நாடுகளின் நலன் களைச் சிறப்பாகப் பிரதிநிதித்து வப்படுத்தும் வகையில் உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட பிரெட்டன் உட்ஸ் சர்வ தேச நிதி நிறுவனங்களைச் சீர்திருத் தம் செய்வது. 2. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படு த்துவது, காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், வரி விதிப்புகள் உள்ளிட்டவற்றில் வள ரும் நாடுகள் மீது காட்டப்படும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள், தடைகள், பாரபட்சமான நட வடிக்கைகள் இருக்கக் கூடாது. 3. ஐ.நா. பாதுகாப்பு அவை உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அவை களின் அமைப்புகளில் விரிவான சீர்திருத்தத்தை பிரிக்ஸ் கூட்ட மைப்பு ஆதரிக்கிறது. அதன் மூலம் உலக நாடுகளின் மீது ஒருதலைப் பட்சமான அணுகுமுறை இல்லாமல் பொதுவான பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க இயலும் என இப்பிரகட னம் வலியுறுத்தியுள்ளது.

சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு உதவி

1. நாடுகளுக்கு இடையேயான டிஜிட்டல் ஏற்றத்தாழ்வைக் குறைப் பதன் மூலம் தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களின் திறனை  வளர்க்கவும், அந்த நடவடிக்கை ஒவ்வொரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் பிரிக்ஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். 2. 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய வளர்ச்சி வங்கியில் (பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கிய New Development Bank) மாற்றங்கள் கொண்டுவரப்படும். 3. நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை அதிகரிப்பதற்கு, உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி உயர் தொழில்நுட்பம் கொண்ட பொருள்களை உற்பத்தி செய்யவும், வளர்ச்சிக்கான ஒத்து ழைப்பை வலுப்படுத்தவும் புதிய தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கவும் பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கிறது. 4. தடுப்பூசிகள், அணு மருத்துவத் திட்டங்கள் (ஐசோடோப்புகளைச் செல்களில் பயன்படுத்தி குணப்படுத்துவது) உள்ளிட்ட மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு முடிவு செய்கிறது. 5. பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு எளிமையாகக் கொண்டுசெல்வது வரையி லான ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த தளவாடத் தளம் உருவாக்கு வதை பிரிக்ஸ் கூட்டமைப்பு வரவேற்கிறது. 6. சர்வதேச விதிகள் அடிப்படையிலான விவசாயப் பொருள்கள் மற்றும் உரங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், இடையூறுகளைக் குறைப்பதற்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே தானியப் பரிமாற்றம் செய்வது என ரஷ்யா முன்மொழிந்துள்ள திட்டத்தை இந்தப் பிரகடனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

வளரும் நாடுகளுடனான ஒத்துழைப்பு

1. வளரும் நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்கு இடையே யான பரிவர்த்தனைகளுக்கு டாலருக்கு மாற்றாகச் சொந்த நாணயங்களைப் பயன்படுத்தும் முறையை அதிகரிப்பது. 2. பொதுவான நலன்களின் அடிப்படையில் நாடு களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது டன், இந்தப் பிரகடனம் உறுப்பினராக உள்ள நாடுகளின் பொருளாதாரக் கூட்டு உத்தியைத் தொடர்ந்து செயல்படுத்துவது. 3. பிரிக்ஸ் கூட்டமைப்பிற்குத் தெற்குலக நாடுகளின் மத்தியில் ஏற்பட்டு வரும் மதிப்பை கூட்டமைப்பு வரவேற்பதுடன், ஆப்பிரிக்கா உள்ளிட்ட குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.

உலகளாவிய நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு

1. பாரபட்சமான முறையிலும், அரசியல் நோக்கத்துடனும் நாடுகளின் மீது விதிக்கப் படும் தடைகளுக்குக் கசான் பிரகடனம் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் இந்தச் சட்டவிரோதச் செயல்பாட்டால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது. 2. விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தத் துடிக்காத மற்றும் ஆபத்தை விளைவிக்காத நாடுகளின் ஆட்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. 3. உக்ரைன் உடனான போர் விஷயத்தில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்களின் ரஷ்ய ஆதரவு  நிலைபாட்டை வெளிப்படுத்தும் அதே நேரத்தில்,  அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம்  போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கின்றன. 4. ஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு முழு அங்கீ காரம் வழங்க பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கிறது. 5. லெபனானில் ஐ.நா. ஊழியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும், செப்டம்பர் 17 அன்று நடந்த பேஜர் தாக்குதலையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டிக்கிறது. இவ்வாறு பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், மனித உரிமைகளை அரசியலாக்கு வதையும், மனித உரிமைகள் மீதான இரட்டை நிலைப்பாட்டையும் அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் பிரிக்ஸ் மாநாட்டுப் பிரகடனம் கண்டித்துள்ளது.